ஆஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு: மடக்கி பிடித்தவருக்கு பாராட்டு

1

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 16 ஆக அதிகரித்துள்ளது. யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை - மகன் என்பது தெரிய வந்துள்ளது.


பாண்டை கடற்கரையில் பயங்கரவாதி ஒருவர் மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒருவர் பின்னால் இருந்து சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார். மேலும், எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கைகளால் பயங்கரவாதியை தாக்கி துப்பாக்கியையும் பறித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அவரது அசாத்திய தைரியத்தை பாராட்ட வைத்துள்ளது.


அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அஹமது அல் அஹமது, 40, என தெரியவந்துள்ளது. மேற்காசிய நாடான சிரியாவைச் சேர்ந்த அவரது குடும்பம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Advertisement