விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
சென்னை: வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றில் திமுக அரசு அடிக்கிறது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: டிட்வா புயலால் பாதிப்படைந்த அனைத்து டெல்டா விவசாயிகளுக்கும் பல வாரங்களாகியும் திமுக அரசு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. பழுதடைந்த அரசு தானியக்கிடங்குகளாலும், கொள்முதல் செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தாலும் தான் பல டன் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்பு கட்டிப்போயின.
தங்களின் பல மாத உழைப்பு பாழாய்ப்போனதைக் கண்டு கலங்கி நிற்கும் விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல், நெற்பயிர்களைப் பார்சலில் கொண்டு வந்து ஆய்வு செய்தார் முதல்வர். ஆய்வு செய்து பல வாரங்களாகியும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை இன்னும் வழங்காமல் திமுக அரசு இழுத்தடிப்பது நியாயமல்ல.
''நானும் டெல்டாகாரன்" என மேடையில் முழங்குவதை விட, ஏக்கருக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்கி விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பது தான் சாலச் சிறந்தது என்பதை முதல்வருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றில் திமுக அரசு அடிக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்காமல் வஞ்சித்து வரும் திமுக அரசின் அலட்சியமே அக்கட்சியின் ஆட்சி அரியணைக்கு முடிவுரை எழுதப்போகிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு டில்லியில் போராடிய போது நீங்க எங்க போனீங்க?
டில்லியில் திமுகவினர் பணம் கொடுத்து நடத்திய போராட்டம் என்று பிறகு தெரிந்தது. 20 பேர் நடத்தியது போராட்டமா
நயினார் நாகேந்திரன் கூறுவது உண்மை என்பதனை யார் ஊர்ஜிதம் செய்யவேண்டும்மேலும்
-
31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
-
பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு
-
ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்
-
ஜீவகாருண்யத்திற்கு முளை்த்த சிறகுகள்
-
வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு
-
100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்