கனிமொழி குறித்து அவதுாறு பரப்பியவர் கைது

1

மதுரை: கனிமொழி குறித்து அவதுாறு கருத்துகளை பரப்பியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சை நீடிக்கும் நிலையில், 'அது நில அளவைக்கல்' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறினார். இதற்கு ஹிந்து அமைப்பினரும், திருப்பரங்குன்றம் பகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கனிமொழி குறித்து சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்துகளை பரப்பியதாக திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கார்மேகம், 65, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement