உஸ்மான் ஹாதியின் கொலையாளிகள் குறித்து வங்கதேசம் சொல்வது பொய்; மேகலாயா போலீசார், பிஎஸ்எப் நிராகரிப்பு
கவஹாத்தி: மாணவர் தலைவர் ஷெரீப் ஹாதியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் வடகிழக்கு மாநிலத்திற்கு தப்பிச் சென்றதாக வங்கதேசத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகளை மேகாலயா போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எப்)
நிராகரித்துள்ளனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அடுத்தாண்டு பிப்., 12ல் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே அந்நாட்டில் தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.
'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர்இழந்தார். இதையடுத்து, அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்தது.
ஓஸ்மான் ஹாதியை துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கும் இருவர் இந்தியாவுக்குள் நுழைந்தனர் என டாக்கா போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வங்கதேச குற்றச்சாட்டை இந்திய எல்லை பாதுகாப்புப்படை மற்றும் மேகாலயா போலீசார் மறுத்துள்ளனர்."மேகாலயாவில் உள்ள ஹலுயாகாத் செக்டார் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் தனிநபர் நுழைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
வங்கதேசத்தின் குற்றசாட்டு ஆதாரமற்றது. தவறாக வழிநடத்துவதாகும். எல்லைப் பாதுகாப்பு படையினர் அப்படி நுழைவது கண்டுபிடிக்கவும் இல்லை என மேகலயாவில் உள்ள பிஎஸ்எப் தலைவர் தெரிவித்துள்ளார்.
வங்கதேசம் , பாகிஸ்தான் இந்த உலகத்தின் இரு சாப நாடுகள்.
இரண்டு நாட்டு தீவிர முஸ்லீம் மக்கள் விரைவில் அழிவார்கள்.
நடவடிக்கை தேவைமேலும்
-
பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு; பொதுக்குழுவில் தீர்மானம்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்