த.வெ.க., செங்கோட்டையனை சந்தித்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நீக்கம்
சென்னை; அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், ஓமலுார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பல்பாக்கி கிருஷ்ணன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க., கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகவும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயரும் களங்கமும் ஏற்படும் வகையில் செயல்பட்ட சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் பல்பாக்கி கிருஷ்ணன், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்' என கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்குமாறு குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்; மேலும், அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரை த.வெ.க.,வில் இணைக்க பேச்சு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலுார், பல்பாக்கியைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணனை, சேலத்தில் உள்ள அவரது வீட்டில், த.வெ.க., தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், 10 நாட்களுக்கு முன் சந்தித்தார்.
அப்போது, கிருஷ்ணனின் மகன் ராமச்சந்திரன், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து, பல்பாக்கி கிருஷ்ணன் த.வெ.க.,வில் இணைந்ததாக தகவல் பரவியது. இந்நிலையில், அவரை கட்சியிலிருந்து பழனிசாமி நீக்கியுள்ளார். இதற்கிடையே, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர், வரும் ஜனவரியில் த.வெ.க.,வில் இணைய உள்ளதாக செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
மேலும்
-
உ.பி.,யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
-
திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் தான் தீபம் ஏற்றப்படுகிறது; சொல்கிறார் திருமா
-
டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள் 7 பேர் கைது
-
கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு; மத்திய தொல்லியல் துறை அனுமதி
-
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
-
உஸ்மான் ஹாதியின் கொலையாளிகள் குறித்து வங்கதேசம் சொல்வது பொய்; மேகலாயா போலீசார், பிஎஸ்எப் நிராகரிப்பு