யு.பி.ஐ., சேவை வழங்க 'பேநியர்பை ' க்கு அனுமதி

'பே நியர்பை' நிறுவனம், யு.பி.ஐ., சேவைகள் வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. தன்னை மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன் புரொவைடராக அனுமதிக்கக்கோரி என்.பி.சி.ஐ., எனும் தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகத்திடம் விண்ணப்பித்ததை அடுத்து, அவ்வாறு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, 'பேநியர்பை சாத்தி' என்ற பெயரில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய வசதி, 'டிஜிட்டல் நாரி' தளம் வாயிலாகவும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement