பூச்சி கட்டுப்பாடு செயல் விளக்கம்

புதுச்சேரி: கரையாம்புத்துார் உழவர் உதவியகம் சார்பில் வேளாண் கல்லுாரி மாணவர்கள், விவசாயிகளுக்கு பூச்சி கட்டுப்பாட்டு செயல் விளக்கம் அளித்தனர்.

மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், கரையாம்பத்துார் கிராமத்தில் ஊரக வேளாண் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இம் மாணவர்கள் விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல், நட்பு பூச்சி கட்டுப்பாட்டு முறைகள், அரசு வேளாண் மானியத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பாகூர் வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் மோகன், வேணுகோபால் சூரிய ஆற்றலில் இயங்கும் சோலார் லைட் ட்ராப் மூலம் ரசாயனமில்லாமல், குறைந்த செலவில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கினர்.

Advertisement