ஆறாவது நாளாக நர்ஸ்கள் போராட்டம்
கோவை: தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், ஆறாவது நாளாக நர்ஸ்கள் போராட்டம் தொடர்கிறது.
தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 18ம் தேதி, முதல் போராட்டம் நடக்கிறது. ஆறாவது நாளாக நேற்று, நர்ஸ்கள் கண், கைகள், வாயை கருப்புத் துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நர்ஸ்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி வேண்டாம், நிரந்தர பணி வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து சங்கங்களிடமும் பேச வேண்டும், ரூ.30 கோடியில் கட்டடம் இருக்கு; ஆனால், போதியளவில் நர்ஸ்கள் இல்லை, நர்ஸ்களின்றி எதுவும் இல்லை...' என அரசுக்கு எதிராக நர்சுகள் கோஷம் எழுப்பினர்.
நர்ஸ்கள் கூறுகையில், '2015ல் பணிக்கு சேர்ந்த எங்களை நிரந்தரம் செய்யவில்லை. இதனால், அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில், சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இனிமேல் ஒப்பந்த அடிப்படையில், நர்ஸ்களை தேர்வு செய்யக்கூடாது. நாங்கள் எம்.ஆர்.பி., மூலம், தேர்வு எழுதி பணியமர்த்தப்பட்டுள்ளோம். பிற போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களை, நிரந்தர பணியில் அமர்த்துகின்றனர். ஆனால், எங்களை மட்டும் ஒப்பந்த அடிப்படையில், தேர்வு செய்வது ஏன்?' என்றனர்.
தமிழக அரசுதான் இவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
மேலும்
-
ஜீவகாருண்யத்திற்கு முளை்த்த சிறகுகள்
-
வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு
-
100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
-
ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு அட்டூழியம்
-
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
-
கனடாவில் இந்தியப்பெண் படுகொலை