கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 5 மாதம் சம்பளம் இல்லை
தேவகோட்டை: கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு சம்பள பாக்கியால் பணியாளர்கள் அவதிப்படுகின்றனர்.
தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளிலும் கொசுப்புழு ஒழிப்பு பணிக்காக 20 பேர் வேலை பார்த்து வருகின்றனர். நாள் ஒன்றிற்கு ரூ .523 சம்பளமாக வழங்கப்படுகிறது.
கடந்த ஜூன் முதல் சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. கொசு புழு ஒழிப்பு பணியாளர் சங்கம் சார்பில் முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர், திட்ட இயக்குநர் ஆகியோரிடம் முறையிட்டனர். கலெக்டர் சம்பள பாக்கியை உடன் வழங்க உத்தரவிட்டார். ஒன்றிய அதிகாரிகள் ஜூன், ஜூலை மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கினர்.
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை சம்பளம் வழங்கவில்லை. வேறு எந்தவித வருமானம் இன்றி இவர்கள் நான்கு மாதங்கள் சம்பளம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
ஒன்றியத்தில் சம்பளம் போட நிதி இல்லை எனவும், 2026 ஏப்ரலில் தான் சம்பளம் கிடைக்கும் என அதிகாரிகள் கூறிய பதிலை தொடர்ந்து பணியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும்
-
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
-
கனடாவில் இந்தியப்பெண் படுகொலை
-
வணிகர்களின் வேதனைக்குரல் உலுக்கியது: சொல்கிறார் ராகுல்
-
இந்தியாவின் விண்வெளி பயணத்தில் பெருமைமிக்க மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு
-
கிறிஸ்துமஸ் அன்று போர் நிறுத்தக் கோரிக்கை நிராகரிப்பு; ரஷ்யாவின் செயலால் போப் 14வது லியோ வேதனை
-
வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.10 ஆயிரம் உயர்வு; தங்கம் விலையும் வரலாறு காணாத உச்சம்