சாலைகளை சீரமைக்க கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளை சார்ந்த, பல்வேறு முக்கிய சாலைகள் உள்ளன.

இதில், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் உள்ளன. இச்சாலைகள், நெடுஞ்சாலைகள், ஊரக வளர்ச்சி துறை, ஊராட்சி நிர்வாகம் ஆகிய துறை சார்ந்த பராமரிப்பில் உள்ளன.

இந்நிலையில், பருவமழையால், ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த சில சாலைகள் மேலும் சேதமடைந்துள்ளன. ம ழைநேரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

தற்போது மழைவிட்டு, வெயில் அடிக்கும் நிலையில், சேதமான சாலையில் மண் துாசு பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு பாதிக்கப்படுகின்றனர். எனவே, சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைகள், ஊரக வளர்ச்சி துறை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement