மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து பயணிகள் 10 பேர் பலியான சோகம்
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 10 பேர் பரிதாபமாக உயரிழந்தனர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிவேகம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பஸ் மற்றும் லாரிகள் விபத்துக்குள்ளாவது அடிக்கடி நடக்கும் சம்பவமாக மாறியுள்ளது. கிறிஸ்துமஸ் தினமான நேற்று (டிசம்பர் 25) மெக்சிகோ சிட்டியில் இருந்து சிகோன்டெபெக் கிராமத்திற்கு சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
ஜோன்டெகோமாட்லான் நகர் அருகே சென்ற பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பஸ்ஸில் பயணித்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதேபோல, கடந்த நவம்பர் மாதம் மிச்சோகன் பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
ஆந்திராவில் அதிகாலை பயணத்தால் சோகம்: பஸ் மீது கார் மோதியதில் 4 பேர் பலி
-
2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை
-
அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி
-
மயிலாடுதுறையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து
-
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி... 24 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் குரலாக ஒலித்த புடின்!
-
இந்தியாவுடன் கருத்து வேறுபாட்டை உருவாக்க முயற்சி; அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு