வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மாற்றி ஈ.வெ.ரா., பெயரை சூட்டுவதா: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்

20

நமது நிருபர்




ஏற்காடு செல்லும் மலைப்பாதை வளைவுக்கு ஈ.வெ.ரா., பெயர் சூட்டியதற்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர், அந்த இடத்தில் தகடூர் அதியமான் வளைவு என பிளக்ஸ் ஒட்டினர்.


சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 20 கொண்டை ஊசி வளைவுகள் (hairpin bends) உள்ளன. இந்த வளைவுகள் மிகவும் செங்குத்தானவை. ஒவ்வொரு வளைவுக்கும் பண்டைய கால மன்னர்களின் புகழைப் போற்றும் வகையில், அவர்களது பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், 8வது கொண்டை ஊசி வளைவிற்கு தகடூர் அதியமான் வளைவு என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.

கடந்த கோடை விழாவின் போது சாலையை புதுப்பிக்கும் பொழுது எட்டாவது கொண்டை ஊசி வளைவிற்கு ஈவெரா பெயரை நெடுஞ்சாலை துறையினர் வைத்துவிட்டனர். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த வளைவில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ஈவெரா என்ற பெயரை அழித்து விட்டு, அதன் மீது, கருப்பு பெயின்ட் அடித்து, 'தகடூர் அதியமான்' வளைவு என, பிளக்ஸ் ஒட்டினர். போராட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.




இது குறித்து, நாம் தமிழர் கட்சியினர் கூறியதாவது: 8வது வளைவுக்கு, 'தகடூர் அதியமான்' என பெயர் வைக்கப்பட்டிருந்தது. கடந்த கோடை விழாவின்போது நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டு ஈவெரா பெயரை வைத்துவிட்டனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வளைவிற்கு, 'தகடூர் அதியமான் பெயர் தான் இருக்க வேண்டும், என்றனர்.

ஈவெரா பெயரை அழித்த நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏற்காடு திராவிடர் விடுதலை கழகத்தினர், போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். நெடுஞ்சாலை துறையினர், நா.த.க.,வினர் மீது நடவடிக்கை கோரி
ஏற்காடு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்படி 13 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Advertisement