கர்ப்பிணிக்கு வீட்டிலே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்

வடமதுரை: அய்யலுார் பூசாரிபட்டியை சேர்ந்த வெள்ளையம்மாளுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3வதாக நிறைமாத கர்ப்பமாக இருந்தார்.

அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அழைப்பு வர வடமதுரை பகுதி 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கனகுபாண்டி, மருத்துவ உதவியாளர் பிரதீபா பூசாரிபட்டி சென்றனர். ஆம்புலன்சில் ஏறுவதற்கு முன்பே வெள்ளையம்மாளுக்கு பிரசவ வலி அதிகமானது.

இதனால் மருத்துவ உதவியாளர் பிரதீபா தானே பிரசவம் பார்த்து தாய், சேயை காப்பாற்றினார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தொடர் கண்காணிப்பு மருத்துவ சிகிச்சைக்காக அய்யலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

Advertisement