அமெரிக்காவின் 20 நிறுவனங்களுக்கு சீனா தடை
பீஜிங் : தைவானுக்கு ஆயுதங்கள் விற்க ஒப்பந்தம் போட்டதால், அமெரிக்காவின், 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனா, அதனருகே உள்ள தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடிக்கிறது.இந்நிலையில், சீனாவின் எதிர்ப்பை மீறி, 99,822 கோடி ரூபாய் மதிப்பில் தைவானுக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா ஒப்பந்தம் போட்டது. ஆத்திரமடைந்த சீனா, அமெரிக்காவில் உள்ள ஆயுத தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த 20 நிறுவனங்களுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. அத்துடன், அந்நிறுவனங்களைச் சேர்ந்த 10 உயரதிகளுக்கும் தடை விதித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'தைவான் பிரச்னையில், ஆத்திரமூட்டும் செயல்களை செய்ய முயற்சிக்கும் எவருக்கும் சீனாவின் உறுதியான பதில் வழங்கப்படும். ஒரே சீனா என்ற கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும். தைவானுக்கு ஆயுதம் வழங்கும் ஆபத்தான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தடை செய்யப்பட்டுள்ள 20 நிறுவனங்களில், பெரும்பாலானவை சீனாவுடன் வர்த்தகம் செய்யவில்லை. எனவே, இந்த தடை என்பது அமெரிக்காவிற்கு எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.
மேலும்
-
காருக்குள் பெண் மேலாளர் பலாத்காரம்; ஐ.டி., நிறுவன சி.இ.ஓ., உட்பட மூவர் கைது
-
உ.பி., வளர்ச்சியில் கல்கோடியாஸ் பல்கலை முக்கிய பங்காற்றுகிறது: முதல்வர் யோகி பாராட்டு
-
திருவனந்தபுரம் மேயராக பா.ஜ., ராஜேஷ் பதவியேற்பு; இடதுசாரி கோட்டையை தகர்த்து சாதனை
-
வங்கதேசம் போல மாறணுமா?
-
மனைவியை எரித்து மகளை தீயில் தள்ளியவர் தலைமறைவு
-
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வில் அமித் ஷா 'பார்முலா'