இந்தியா வளர வேண்டியது காலத்தின் கட்டாயம்: மோகன் பாகவத்
திருப்பதி: '' இந்தியா வளர வேண்டும். அது காலத்தின் கட்டாயம். அத்துடன் விஸ்வகுருவாக மாற வேண்டும்,'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
திருப்பதியில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: பழைய குருட்டு நம்பிக்கைகளை மக்கள் வெளியே வருவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இது புதிய குருட்டு நம்பிக்கைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கும் பொருந்தும். நமது பழைய கோயில்களின் கட்டடக்கலை பல பேரழிவுகளில் இருந்து தப்பியது. கடந்த 10,000 ஆண்டுகளாக பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறோம். மண் அப்படியே இருந்தது. ஆனால் இப்போது, உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் காரணமாக, பஞ்சாபில் இருந்து ஜெய்ப்பூர் வரை புற்றுநோய் பரவ துவங்கி உள்ளது.
இந்தியா வளர வேண்டும், ஏனெனில் அது காலத்தின் தேவை. ஆனால் இந்தியா ஒரு வல்லரசாக மட்டுமல்ல, ஒரு விஸ்வ குருவாகவும் மாற வேண்டும். அறிவு அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். ஒருவரின் தாய்மொழியில் கற்றல் தாக்கத்தை ஏற்படுத்தும். அறிவியல் அறிவை இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சாமானிய மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
காருக்குள் பெண் மேலாளர் பலாத்காரம்; ஐ.டி., நிறுவன சி.இ.ஓ., உட்பட மூவர் கைது
-
உ.பி., வளர்ச்சியில் கல்கோடியாஸ் பல்கலை முக்கிய பங்காற்றுகிறது: முதல்வர் யோகி பாராட்டு
-
திருவனந்தபுரம் மேயராக பா.ஜ., ராஜேஷ் பதவியேற்பு; இடதுசாரி கோட்டையை தகர்த்து சாதனை
-
வங்கதேசம் போல மாறணுமா?
-
மனைவியை எரித்து மகளை தீயில் தள்ளியவர் தலைமறைவு
-
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வில் அமித் ஷா 'பார்முலா'