மக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை முதல்வர் வேடிக்கை பார்க்கலாமா: நயினார் கேள்வி
சென்னை: அப்பாவி மக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்க கூடாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலிறுத்தி உள்ளார்.
@1brஅவரது அறிக்கை: சென்னையில் இரு வாகன உரிமையாளர்களுக்கு இடையிலான மோதலைக் கட்டப் பஞ்சாயத்து செய்து தீர்க்க வந்த சேப்பாக்கம் பகுதி திமுக 63வது வட்டச் செயலாளர், காதுகள் கூசும் அளவிற்குக் கெட்ட வார்த்தைகளால் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
இப்படி எந்தவொரு அதிகாரமும் நாகரிகமுமின்றி பொதுமக்களை வாய்க்கு வந்தபடி வசைபாடும் நபர்கள் தொடங்கி பெண்களின் பாதுகாப்பைச் சூறையாடும் காமுகர்கள் வரை அனைத்து உடன்பிறப்புகளையும் ஆளுங்கட்சி திமிரை ஊட்டி வளர்த்துவிட்டு, மேடைகளில் மட்டும் பகுத்தறிவு பாடம் எடுப்பது தான் திமுக அரசின் திராவிட மாடலா?
ஆமாம், பொது மேடையில் வைத்தே அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டே பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசும் மூத்த தலைவர்களைக் கொண்ட கட்சி, எப்படி வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கும்? ரவுடிகளை மட்டும் தான் வளர்த்துவிடும். இத்தகைய கருப்பு சிவப்புப் படையைக் கைக்குள் வைத்துக்கொண்டு, தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று முழங்குவது வெட்கக்கேடு.
தாங்கள் வகிக்கும் பதவியின் பொறுப்புணர்ந்து உடனடியாக, அவதூறாகப் பேசிய வட்டச்செயலாளர் மீதும், இருசக்கர வாகன உரிமையாளரைத் தாக்கிய கார் உரிமையாளரின் மீதும் வழக்குப் பதிய உத்தரவிடுங்கள். அப்பாவி மக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்க கூடாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (13)
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
27 டிச,2025 - 15:07 Report Abuse
நயினார் அவர்களே. நீங்க ரொம்ப வேடிக்கையா பேசுறீங்க. முகஸ், தான் ஒரு சர்வாதிகாரி ன்னு முன்பே ஒரு தடவை பேசியிருக்கார். அதை நீங்க மறந்துடப்புடாது. ஏன்னா எங்களுக்கு நீங்க வேணும். ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. திருட்டு தீயமுக காரனுங்க எங்கே எவன்களை பிடிச்சு வம்பிழுக்கலாம். எப்புடி மாட்டி உட்டு உட்கட்சி தகறாறுன்னு தம்பட்டம் அடிக்கலாம் ன்னு கண் கொத்தி பாம்பு மாதிரி பாத்துகிட்டே இருக்கானுங்க. ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. 0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
27 டிச,2025 - 13:54 Report Abuse
திராவிட முன்னேற்ற கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உலக ஆசாபாசங்களுக்கு கட்டுப்பட்டவர் தானே. கட்சி தொண்டர்கள்சிலர் பேசும் ஆபாச மொழிகள் பிடித்துஇருக்கலாம். வேடிக்கை பார்க்கிறார் என்று கூறக்கூடாது. ரசிக்கிறார் என்று என்று கருதவேண்டும் 0
0
Balaji Radhakrishnan - ,
27 டிச,2025 - 14:09Report Abuse
தமிழக மக்களுக்கு மானம் ரோஷம் இருந்தால் வருகின்ற தேர்தலில் திமுகவை படு தோல்வி அடைய செய்ய வேண்டும். 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
27 டிச,2025 - 13:01 Report Abuse
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுபவர்களை மக்கள் என்றுதான் அழைக்க வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் தப்பொன்றும் இல்லை 0
0
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
27 டிச,2025 - 13:59Report Abuse
75 லட்சம் பேருக்கு 10000 கொடுத்து வோட்டு கேட்டவரை என்ன என்று அழைப்பது , உலக மகா யோக்கியன் என்றா 0
0
Reply
பாலாஜி - ,
27 டிச,2025 - 12:52 Report Abuse
சட்டம் ஒழுங்கு கடைபிடித்தால் காவல்துறை தாக்குதலுக்கு ஆளாக நேரிடாது 0
0
vivek - ,
27 டிச,2025 - 14:10Report Abuse
ஏல அரைவேக்காடு...அராஜகம் செய்வதே உன் கொத்தடிமை கும்பல் தானே 0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
27 டிச,2025 - 12:40 Report Abuse
கேவலமான ஆட்சி,சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிற கேவலமான சட்டம் ஒழுங்கு காவல்துறை ,திமுக ரவுடிகளின் அடிமைகள் 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
27 டிச,2025 - 12:22 Report Abuse
ஸ்டாலினிடம் ஆங்கிலம் அல்லது உருது மொழியில் பேச சொல்வீர்களா? பிரஸ்மீட்டில் டென்ஷனான மெஹபூபா முஃப்தி ,அதாவது காஸ்மீரில் உள்ள மெஹபூபா வுக்கு ஸ்டாலின் அருமை தெரிகிறது இங்குள்ள ஆஷாடபூதி க்கு தெரியவில்லை 0
0
Reply
amsi ramesh - ,இந்தியா
27 டிச,2025 - 12:20 Report Abuse
இரும்புக்கரம் துருபிடித்துவிட்டதா திராவிட விடியா மடல் முதல்வரே 0
0
Reply
surya krishna - ,
27 டிச,2025 - 12:13 Report Abuse
தமிழக மக்களே! இந்த திராவிட கும்பலிடம் நாட்டை அடக்க வைக்காதீர்கள் என்று முதலில் சொன்னார்கள். ஒப்படைத்துவிட்டு பொதுமக்கள் படும் பாட்டை பார்த்தீர்களா? 2026 வது திருந்துங்கள். 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
27 டிச,2025 - 11:29 Report Abuse
நான் சர்வாதிகாரி ன்னு சொன்னது யாரு ???? 0
0
Vasan - ,இந்தியா
27 டிச,2025 - 12:23Report Abuse
அப்பா 0
0
Reply
மேலும்
-
பாஜ, ஆர்எஸ்எஸ்க்கு திக்விஜய சிங் திடீர் பாராட்டு; காங்கிரஸ் தலைமை அதிருப்தி
-
என்னையும், விஜய்யையும் பாஜ பெற்றெடுத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தாரா; சீமான் விமர்சனம்
-
கம்போடியா- தாய்லாந்து இடையே மீண்டும் போர் நிறுத்தம் அமல்: புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
-
என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்
-
பட்டா மாறுதலுக்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் விஏஓ!
-
மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்
Advertisement
Advertisement