விவசாயி வேடத்தில் நடக்கும் அரசியல்; முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
திருவண்ணாமலை: ''சிலர் விவசாயி வேடம் போட்டு அரசியல் செய்வர்; விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள்,'' என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:





தனி பட்ஜெட்
விவசாயத்துக்கு திமுக அரசு முன்னுரிமை தருகிறது. விவசாயிகளைத் தேடி தொழில்நுட்பங்கள் வர வேண்டும். அதற்காகவே இத்தகைய கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. திராவிட மாடல் அரசின் விவசாய நலத்திட்டங்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். 13 தலைப்புகளில் வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் உடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வேளாண் துறையில் உள்ள பிரச்னைகளை களைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேளாண்மை உற்பத்தியை பெருக்க வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி விவசாயிகளை சென்று சேர வேண்டும். தொழில் நுட்பங்களை தேடி விவசாயிகள் அலைய வேண்டாம்.
விவசாயி வேடம்
5 வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து இருக்கிறோம். இந்த 5 பட்ஜெட்களை சேர்த்து ஒதுக்கி இருப்பது ஒரு லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாய். 55,750 ஏக்கர் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி வருகிறோம். நாம் ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன், வேளாண்மை துறை என்று இருந்த பெயரை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றினோம்.
சிலர், பெயரை எல்லாம் இஷ்டத்திற்கு மாற்றுவார்கள். ஆனால் விவசாயிகளை தவிக்கவிட்டு நடுத் தெருவில் போராடவிட்டு விடுவார்கள். இன்னும் சிலர் விவசாயி வேடம் போட்டு கொண்டு, அரசியல் செய்வார்கள். ஆனால் விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை ஆதரிப்பார்கள். விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள்.
ஆனால் திராவிட மாடல் அரசுக்கு, விவசாயிகளின் நலனும், வளர்ச்சியும் தான் முக்கியம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
@block_P@
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அறிவிப்புகள் பின்வருமாறு:
* திருவண்ணாமலையில் ரூ.3 கோடி மதிப்பில் 500 மெட்ரிக் டன் கொண்ட சிறப்பு கிடங்கு, விவசாயிகளுக்கு ஓய்வறை நிறுவப்படும்.
* சேத்துப்பாட்டு, போளூர், வந்தவாசி உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய உலர் கிடங்கு அமைக்கப்படும்.block_P
தினமலர் நேரலை ஒளிபரப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி தினமலர் இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.
பாதிரியார் வேஷம் போட்டு அரசியல் செய்வார் இவர். விவசாயி தெரியாமல் ஒரு போலி விவசாயி வேடம் போட்டு வயலில் சிமெண்ட் போட்டு இறங்குவார் இவர் செய்யும் அரசியலை விட உண்மையான விவசாயி நான் விவசாயி என்று அரசியல் செய்வது எவ்வளவு மேல்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் 3 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்ப்பாம் .......இதை கண்டு, நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் பலரும் அதிர்ச்சியாம் ..இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியில் இலவசமாக இடம் கிடைக்குதுன்னு சமூக விரோதிகள் இந்த விடியல் ஆட்சியில் கஞ்சா செடி வளர்க்கறானுங்க .. ..
சிறையில் அடைக்கும் நாள் வெகு அருகில்.
hydro corbon , மீத்தேன் , திட்டங்களுக்கு . tungstun , திட்டங்களுக்கு எந்த அறிவாளி அனுமதி கொடுத்தது ,
கண்காட்சி அரசியல் பண்ணுகிறோம் என்று வெளிப்படையாக பேசி விட்டார். இது எங்க போய் முடியப்போவுதோ தெரியலையே.
.... படு கேவலமான ஆட்சி நடக்குது ...இதை கவனிக்க விடியலுக்கு துப்பில்லை ....இந்த லட்சணத்தில் வேளாண் பட்ஜெட்டாம் ....மானங்கெட்ட தனமாக இருக்குது ..
Stalin ji , instead of renaming , affixing sticker on the external funded projects Central government , Asia development bank and world bank , what are new development work your government has done , how many check dams , you have constructed , how many projects you have commenced like use the flood water of Kauveri and Thamaraparani . NIL . Always bluffing
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்களை அடித்துபிடுங்கி புளொட் போட்டு வித்து கோடிக்கணக்குல காசு பார்த்ததுல திமுகவின் பங்கு பெரும்பங்கு. இந்தாளுக்கு தமிழகமக்களை பார்த்தால் முட்டாள்களாக தெரிகிறது.. ஆனால் அதுவும் ஒருவகையில் உண்மைதான்
நிறைய ஒதுக்கிவிட்டதாக avare ஒப்புக் கொண்டார். இனியும் விட்டு வைக்கலாமா?.
2026 ல் தி மு க கோமா நிலைக்கு செல்லும்.... அது இந்த ஆளின் உளரலில் நன்கு தெரிகிறது...மேலும்
-
பாஜ, ஆர்எஸ்எஸ்க்கு திக்விஜய சிங் திடீர் பாராட்டு; காங்கிரஸ் தலைமை அதிருப்தி
-
என்னையும், விஜய்யையும் பாஜ பெற்றெடுத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தாரா; சீமான் விமர்சனம்
-
கம்போடியா- தாய்லாந்து இடையே மீண்டும் போர் நிறுத்தம் அமல்: புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
-
என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்
-
பட்டா மாறுதலுக்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் விஏஓ!
-
மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்