சென்னையில் நேற்று இடைநிலை ஆசிரியர்கள்; இன்று தூய்மை பணியாளர்கள் கைது
சென்னை: தூய்மை பணியை தனியாருக்கு மாற்றுவதை கைவிட வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி 2 மாதங்களாக வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் இதுவரை நடந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் முடிவுக்கு வருவதில் சிக்கில் நீடிக்கிறது.
இதற்கிடையே பேரணியாக சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம். முதல்வர் ஸ்டாலினிடம் முறையிடுவோம் என்று அறிவித்தனர். இதனால் இன்று அதிகாலையிலேயே பாரி முனை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாரிமுனை குறளகத்தில் இருந்து ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். பிராட்வே பஸ் நிலையத்தில் வைத்து தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று (டிசம்பர் 26)
'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தை நேற்று முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேரை, போலீசார் குண்டுகட்டாக கைது செய்து, பஸ்சிலேயே சென்னையை சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக மாலையில் அவர்களை போலீசார் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (8)
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
27 டிச,2025 - 14:29 Report Abuse
எங்க ஆட்சியில போராடக்கூடாது ..... அதிமுக ஆட்சியில்தான் போராடணும் ... புரிஞ்சுதா ? 0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
27 டிச,2025 - 14:18 Report Abuse
விஜய் மல்லையா லலித்மோடியை இந்திய கொண்டு வருவதை போல இதுவும் தொடர்கதையாக. 0
0
Reply
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
27 டிச,2025 - 14:06 Report Abuse
பொழுது விடிந்த பொழுது போன போதும் ஒரே அக்கப்போர் , எப்படி இந்த கர்த்தரின் சீடன் மற்றும் உப்பிஸ் கடைசி மூணு மாசம் வசூல் பண்ணுவது கோட்டைக்கு எதுவம் சுரங்கப்பாதை இருக்கா 0
0
Reply
ஆதிநாராயணன் - ,
27 டிச,2025 - 14:04 Report Abuse
இத்தனை அராஜகம் ஊழல்,குடும்ப ஆட்சி நடந்தாலும் அதை மக்கள் பெரிது படுத்தாமல் வரும் தேர்தலில் திமுக கூட்டணியை 200தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறச் செய்ய வேண்டும் இல்லையென்றால் பாஜக உள்ளே வந்து விடும் 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
27 டிச,2025 - 13:53 Report Abuse
சென்னையில் நேற்று இடைநிலை ஆசிரியர்கள் இன்று தூய்மை பணியாளர்கள் கைது, நாளை யாருக்கு இந்த பாக்கியம் வருமோ ,NURSE கடித்து விட்டு விட்டேர்களே 0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
27 டிச,2025 - 13:41 Report Abuse
மக்கள் வரி பணம்தான் பணி புரிவோருக்கு வழங்கப்படுகிறது. அமைச்சர் சட்ட மன்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏன் அரசு ஊழியர்கள் மட்டும் போராடுகிறார்கள். இவர்கள் போராடுவதில்லை.? காரணம் இவர்கள் சம்பளம் தேவைக்கு மேல்பட்டதாய் இருக்கலாம். இதனை மக்கள் ஏன் நினைக்கவில்லை.? அரசிடம் விளக்கம் கோரவில்லை? 0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
27 டிச,2025 - 13:39 Report Abuse
CM is busy 0
0
Reply
subramanian - Mylapore,இந்தியா
27 டிச,2025 - 13:38 Report Abuse
அடக்குமுறை ஜனநாயக விரோதம். திமுக ஒழிக. 0
0
Reply
மேலும்
-
பாஜ, ஆர்எஸ்எஸ்க்கு திக்விஜய சிங் திடீர் பாராட்டு; காங்கிரஸ் தலைமை அதிருப்தி
-
என்னையும், விஜய்யையும் பாஜ பெற்றெடுத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தாரா; சீமான் விமர்சனம்
-
கம்போடியா- தாய்லாந்து இடையே மீண்டும் போர் நிறுத்தம் அமல்: புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
-
என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்
-
பட்டா மாறுதலுக்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் விஏஓ!
-
மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்
Advertisement
Advertisement