ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு டில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ; 285 பேர் சிக்கினர்
நமது டில்லி நிருபர்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, டில்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 285 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
டில்லி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஆப்பரேஷன் ஆகாட் 3.0 என்ற பெயரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் எதிரொலியாக, ஆயுதச்சட்டம், கலால் சட்டம், என்டிபிஎஸ் சட்டம் மற்றும் சூதாட்டச்சட்டம் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் 285 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
அவர்களிடம் இருந்து 21 நாட்டு துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள், போதை ப்பொருட்கள், சட்டவிரோத மதுபான பொருட்கள், திருடப்பட்ட 310 மொபைல் போன்கள், 231 பைக்குகள், ஒரு நான்கு சக்கரம் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக போதைப்பொருட்களை சந்தையில் புழக்கத்தில் விட நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இது தவிர ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குற்றச்சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்கு, பட்டியலில் உள்ள குற்றவாளிகள் 116 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 504 பேர் கைது செய்யப்பட்டனர் என டில்லி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
பாஜ, ஆர்எஸ்எஸ்க்கு திக்விஜய சிங் திடீர் பாராட்டு; காங்கிரஸ் தலைமை அதிருப்தி
-
என்னையும், விஜய்யையும் பாஜ பெற்றெடுத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தாரா; சீமான் விமர்சனம்
-
கம்போடியா- தாய்லாந்து இடையே மீண்டும் போர் நிறுத்தம் அமல்: புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
-
என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்
-
பட்டா மாறுதலுக்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் விஏஓ!
-
மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்