ரூ.2,434 கோடி கடன் மோசடி பஞ்சாப் நேஷனல் வங்கி புகார்

புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி, தன்னிடம் 2,434 கோடி ரூபாய் கடனை பெற்று, திருப்பி செலுத்தாத எஸ்.ஆர்.இ.ஐ.,குழுமத்தின் முன்னாள் உரிமையாளர்களை மோசடிதாரர்களாக வகைப்படுத்துமாறு, ரிசர்வ் வங்கியிடம் புகார் அளித்துள்ளது.

கடந்த 2021 அக்டோபரில் நிர்வாக குளறுபடி புகாரில், கொல்கட்டாவை சேர்ந்த எஸ்.ஆர்.இ.ஐ., எக்யூப்மென்ட் பைனான்ஸ், எஸ்.ஆர்.இ.ஐ., இன்ப்ராஸ்ட்ரெக்சர் பைனான்ஸ் நிறுவனங்களின் பழைய நிர்வாகத்தை கலைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, பல்வேறு வங்கிகளிடம் பெற்ற 32,700 கோடி ரூபாயை திருப்பி செலுத்த முடியாத இரு நிறுவனங்களை கடந்த 2023ல் முடக்கிய, தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம், திவால் நடவடிக்கையை த ு வங்கியது.

இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி, சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில், வங்கியில் எஸ்.ஆர்.இ.ஐ., எக்யூப்மென்ட் 1,240.94 கோடி ரூபாயும், எஸ்.ஆர்.இ.ஐ., இன்ப்ராஸ்ட்ரெக்சர் 1,193.06 கோடி ரூபாயும் கடனை திருப்பி செலுத்தவில்லை என தெரிவித்துள்ளது.

Advertisement