'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸ் மாணவரின் மிகச்சிறிய சலவை இயந்திரம் அங்கீகரிப்பு


சேலம்: சேலம் விநாயகா மிஷன், 'விம்ஸ்' வளாகத்தில் உள்ள, அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின், கண் ஒளியியல் பிரிவு மாணவர், மிகச்சிறு அளவில் சலவை இயந்திரத்தை வடிவமைத்தார். அதை, உலக கின்னஸ் சாதனை நிறுவனம் அங்-கீகரித்துள்ளது.


இதுகுறித்து அக்கல்லுாரி டீன் செந்தில்குமார் கூறியதாவது:

எங்கள் கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி மட்டு-மின்றி, அவர்களது தனித்திறமைகளை ஊக்கு-வித்து மேம்படுத்தி வருகிறோம். அதன்படி சமீ-பத்தில் எங்கள் கல்லுாரியின், கண் ஒளியியல் பிரிவு, 3ம் ஆண்டு மாணவர் ஜீவானந்தம், 12.1 கிராம் அளவில் சலவை இயந்திரத்தை, 72 நிமி-டத்தில் வடிவமைத்தார். இதை, உலக கின்னஸ் சாதனை நிறுவனம் அங்கீகரித்து, சான்றிதழ், பதக்கம் வழங்கியது.


ஏற்கனவே கேரளாவை சேர்ந்த ஒருவர், 25 கிராம் அளவில், சிறு சலவை இயந்திரத்தை வடிவ-மைத்த சாதனையை, எங்கள் மாணவர் ஜீவா-னந்தம் முறியடித்துள்ளார். இதற்கு சிறந்த வழி-காட்டியாக செயல்பட்ட, கண்ணொளியியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ் சுடர், உதவி பேராசிரி-யர்கள் சூர்யா, அஜித்குமாருக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement