2ம் நாளாக 19 பேருக்கு சிகிச்சை ஆய்வுக்கு அனுப்பிய இறைச்சி
ஆத்துார்: கடலுார் மாவட்டம் பண்ருட்டி, மணப்பாக்கத்தை சேர்ந்த, புரோக்கர்கள் வேல்முருகன், வினோத். இவர்கள் அப்பகுதியை சேர்ந்த, 24 பேரை, மர-வள்ளி கிழங்கு அறுவடை பணிக்கு, சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே வடசென்னிமலைக்கு அழைத்து வந்தனர். அங்கு வீடு வாட-கைக்கு எடுத்து தங்கி, பணிக்கு சென்று வருகின்-றனர்.
அங்கு கடந்த, 25ல் ஆட்டிறைச்சி சமைத்து சாப்-பிட்ட, 19 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்-போக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2ம் நாளாக நேற்றும், 19 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆத்துார் சுகாதார மாவட்ட அலு-வலர் யோகானந்த் கூறுகையில், ''டைரியா எனும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமாகியுள்ளனர்.
அவர்கள் வசிப்பிடத்தில் குடிநீரில் பிரச்னை இல்லை. சாப்பிட்ட இறைச்சி ஆய்வுக்கு அனுப்-பப்பட்டுள்ளது,'' என்றார்
மேலும்
-
கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்
-
2025 சாதனை ஆண்டு: பெருமைமிகு தருணங்களை மன் கி பாத் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
-
பாஜவுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ ஆனது நானா, திருமாவளவனா: கேட்கிறார் சீமான்
-
அஜித்துடன் பைக் ரேஸ் சாதனைப்பெண் நிவேதாவின் ஆசை
-
குறளுக்கு ஒரு கண்ணப்பன்
-
தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்