'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!

5

நமது நிருபர்




'ஆன்டிபயாடிக்' மருந்துகள் குறித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிக்கையை மேற்கொள் காட்டி, ''டாக்டர்கள் ஆலோசனையின்றி மருந்துகளை பயன்படுத்த கூடாது'' என மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.


மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், நிமோனியா மற்றும் சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளுக்கு எதிராக ஆன்டிபயாடிக் எதிர்ப்பு மருந்துகள் பயனற்றவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையை மேற்கொள் காட்டினார். மேலும், அவர் பேசியதாவது: ஐசிஎம்ஆர் அறிக்கை அனைவரையும் கவலை அடைய செய்கிறது. எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு கண்மூடித்தனமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வது முக்கிய காரணமாக இருக்கிறது.



@quote@இந்த மாத்திரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் என்ற நம்பிக்கை நோய் தொற்று பாதிப்பை அதிகரிக்க செய்கிறது. சுயமாக மாத்திரைகள் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிர்க்க வேண்டும். quote


அத்தகைய மாத்திரைகளை எடுத்து கொள்வதற்கு முன்பு டாக்டர்களை அணுக வேண்டும். மருந்துக்கள் பயன்பாட்டில் அதிக விழிப்புணர்வுகள் மிக முக்கியம். டாக்டர்கள் ஆலோசனையைப் பின்பற்றுவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும் பிரதமர் மோடி பேசினார்.

சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!




இந்தியாவின் மிகவும் கடுமையான பொது சுகாதார சவால்களில் ஒன்றாக 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் உருவாகி வருவதாக சுகாதார நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர். ஆண்டிபயாடிக் மருந்துக்கள் பயன்பாடு, பெரும்பாலும் டாக்டர் சீட்டுகள் இல்லாமல் மருந்துகளை பயன்படுத்து தொற்று பாதிப்பை வழக்கான முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவது விட கடினமான சூழலை உருவாக்கி விடும்.


இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது: உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாக ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துவது மாறியுள்ளது. நோய் தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துவதை தடுக்க அவசர நடவடிக்கை தேவை. இல்லையென்றால் 2050ம் ஆண்டுக்குள் உலகளாவிய இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உருவெடுத்துவிடும். இவ்வாறு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement