இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் உள்ள முதியோர் இல்லத்தில், தீப்பற்றியதில் முதியோர்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோவில் முதியவர்கள் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு படையினர் விரைந்தனர். 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீ அணைத்தனர். ஆனாலும் தீயில் உடல் கருகி முதியோர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உறங்கிக் கொண்டிருந்தபோது தீப்பற்றியதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது என மீட்பு படையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரின் உதவியுடன் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்கம்பக்கத்தினர் முதியோர் இல்லத்தில் பற்றிய தீயை அணைக்க, தீயணைப்பு படை வீரர்களுக்கு உதவியாக இருந்தனர். மின்சார கசிவு காரணமாக தீப்பற்றியதாக தெரிகிறது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆழ்ந்த இரங்கல்மேலும்
-
செப்பேடுகள், தெய்வத் திருமேனிகளை ஒப்படைக்க வேண்டும்:- தருமபுரம் ஆதீனம் கோரிக்கை.
-
சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பெயரில் டிஜிட்டல் கைது: ரூ.3.71 கோடியை இழந்த பெண்!
-
பாஜ எழுதி கொடுப்பதை அதிமுக அறிக்கையாக வெளியிடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
மக்கள் மீது அடக்குமுறையை ஏவும் திமுக அரசு; கருப்புக் கொடியேந்தி அண்ணாமலை குற்றச்சாட்டு
-
கடற்படையின் ஐஎன்எஸ்வி கவுண்டின்யா கப்பல் ஓமனுக்கு பயணம்; படங்களை வெளியிட்டு மோடி பெருமிதம்
-
முடிவை நோக்கி நகருகிறது உக்ரைன் போர்: டிரம்புடன் மீண்டும் பேசுகிறார் புடின்