காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியது திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: கட்டுக்கோப்பான மாநிலமாக இருந்த தமிழகத்தை தடையின்றி கிடைக்கும் போதை பொருட்களால் சீரழித்து, காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியிருக்கிறது திமுக அரசு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
வடமாநில இளைஞரை போதை கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ பகிர்ந்து, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: திருத்தணியில் பணிபுரியும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சூரஜ், கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார். மற்றவர்கள் சமூக ஊடகத்தில் ரீல் பதிவு செய்வதற்காக அவரது கழுத்தில் கத்தியை வைத்தபோது, அதைத் தட்டிக் கேட்ட காரணதால் தாக்கப்பட்டு இருக்கிறார்.
இதுதான் இன்று திமுக ஆட்சியின் கீழ் உள்ள தமிழகத்தின் கவலைக்குரிய யதார்த்தம். போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்தாலும் இந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. போதைப்பொருட்கள் எளிதில் கிடைப்பது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அரசியல் பிரசாரம் மற்றும் கொடிய ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பது திமுக ஆட்சியில் இயல்பாக நடக்கும் ஒன்றாக உள்ளது.
கட்டுக்கோப்பான மாநிலமாக இருந்த தமிழகத்தை, தடையின்றி கிடைக்கும் போதை பொருட்களால் சீரழித்து காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியிருக்கிறது திமுக அரசு. காட்டுமிராண்டித்தனமான ஆட்சியாக மாற்றியதற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
அரசு சாராயம் விற்பது அரசுகளின் மதியின்மையே காரணம் .மக்களுக்கு நல்வாழ்வு அமைத்திட வழிவகுக்க வேண்டிய அரசுகள் தங்களின் சுய லஞ்ச லாபத்திற்காகவும் தங்களின் சாராயம் ஆலைகளின் வருமானத்தை பெருக்கவும் வேண்டி ஏழைக்குடும்பங்களை சீரழித்துவிட்டார்கள் .
திராவிட மாடல் ல என்னதை எதிர்பார்க்க முடியும்
என்னமோ இவர் கட்சி யம் கூட்டணி கட்சிகள் யோக்கிய மான ஆச்சி செய்வதாக கூறி ஏமாற்றுகிறார்
DMK காட்டாச்சிய மாறிடுச்சா தெரியல,
இவர்கள் விடுதலையான பின் ஜெயகடா பேட்டறிவானுக்கு செய்ததது போல கட்டிப்பிடித்து விருந்தளித்து மகிழ்வார்?.
பத்து ஆண்டுகளுக்கு அதிகமாக பாஜக நரேந்திரமோடியின் ஆட்சி, அமித்ஷாவின் ஆட்சி இந்தியாவில் மத்திய அரசில் நடைபெறும் கொடுமை முடிவுக்கு வரவேண்டும் அண்ணாமலை.
2026ல் திமுக ஆட்சிக்கு வருவது குற்றவாளிகளை தவிர யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை வரும்.
காட்டாட்ச்சி, நீதியை மதிப்பதில்லை, கட்சி தொண்டர்கள் மக்களை மதிப்பதில்லை, பெண்கள் , குழந்தைகள் பாலியில் இல்லாத நாளே இல்லை.. போதையில் விபத்தில் அப்பாவிகள், இளைஞர்கள் இறக்கிறார்கள்.....எங்கே போகிறது.... 2026 முடிவுக்கு வர எதிர்கட்சிகள் இனைந்து பாடுபட வேண்டும்
நம்ம கழுத்துல கத்தி விழுகுற வரைக்கும் தூங்குவான் தமிழன்
நடுவன் அரசிற்கு முதுகு எலும்பு இருந்தால் கலைக்க சொல்லுங்கள்மேலும்
-
செப்பேடுகள், தெய்வத் திருமேனிகளை ஒப்படைக்க வேண்டும்:- தருமபுரம் ஆதீனம் கோரிக்கை.
-
சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பெயரில் டிஜிட்டல் கைது: ரூ.3.71 கோடியை இழந்த பெண்!
-
பாஜ எழுதி கொடுப்பதை அதிமுக அறிக்கையாக வெளியிடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
மக்கள் மீது அடக்குமுறையை ஏவும் திமுக அரசு; கருப்புக் கொடியேந்தி அண்ணாமலை குற்றச்சாட்டு
-
கடற்படையின் ஐஎன்எஸ்வி கவுண்டின்யா கப்பல் ஓமனுக்கு பயணம்; படங்களை வெளியிட்டு மோடி பெருமிதம்
-
முடிவை நோக்கி நகருகிறது உக்ரைன் போர்: டிரம்புடன் மீண்டும் பேசுகிறார் புடின்