மாநகராட்சி நிதி பல கோடி ரூபாய் கொள்ளை; அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சேலம்: மாநகராட்சி நிதி, பல கோடி ரூபாய் கொள்ளை போவதாக கூறி, அதை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சேலம் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
செல்வராஜ்(எதிர்க்கட்சி கொறடா): சேலம், 4வது வார்டு, என்.டி.எஸ்., நகரில், 1999ல், மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட, 13,647 சதுரடி பூங்கா நிலத்தை, தி.மு.க., கவுன்சிலரின் உறவினர் ஆக்கிரமித்து, 'பிளாட்' போட்டு விற்றுவிட்டார். அதற்கான பட்டா இன்னும் மாநகராட்சி கமிஷனர் பெயரில் உள்ளதால், நிலத்தை மீட்டெடுக்க வேண்டும். கோட்டம், 22ல் தனியார் நிலத்தில் பிளாட் போட, சுடுகாடு நிலத்தில் சாலை அமைத்து, ஆக்கிரமிக்க முயற்சி நடப்பதால் உடனே தடுக்க வேண்டும்.
யாதவமூர்த்தி(எதிர்க்கட்சி தலைவர்): டி.பி.எஸ்., பணியாளர்கள், 300 பேரை, விரைவு குழு என நியமித்துள்ளனர். எங்கே, என்ன வேலை செய்கின்றனர் என தெரியவில்லை. இல்லாத பணியாள-ருக்கு தினமும் தலா, 485 ரூபாய் ஊதியம் வழங்குவதாக கூறி, 4 கோடி ரூபாய் வரை மோசடி நடக்கிறது.
தாதம்பட்டி இடுகாட்டில் எரிவாயு தகனமேடை அமைப்பதாக கூறி, 2022 - 23 பட்ஜெட்டில், 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, இது-வரை பணி தொடங்கவில்லை. செட்டிச்சாவடி குப்பை கிடங்கில் சோலார் பேனல் அமைப்பதாக, 38 கோடி ரூபாய் செலவு செய்-யப்பட்டு, இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் அதிலும் முறை-கேடு.
வ.உ.சி., பூ மார்க்கெட் ஒப்பந்தம் ரத்து செய்தும், ஒப்பந்ததாரரே பணம் வசூலிப்பதால், ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்-படுகிறது. சீர்மிகு நகர திட்டத்தில், சேலம் அண்ணா பூங்காவில், 'ஐஸ் ஹவுஸ்' அமைப்பதாக, 20 கோடி ரூபாய் வரை செலவு செய்தும், பயன்பாட்டுக்கு வரவில்லை. இப்படி மாநகராட்சி நிதி கொள்ளை போவதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
தொடர்ந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஒருசேர வெளியேறினர்.
ஜெயக்குமார்(தி.மு.க.,): 28வது வார்டில் இரு அமைச்சர்கள் திறந்து வைத்த பிரசவ மருத்துவமனை அவசர கதியில் கட்டப்-பட்டதால், அதன் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு இடியும் அபா-யத்தில் உள்ளது. அங்கு கழிப்பிடமும் இல்லாததால், மருத்துவம-னைக்கு வரும் பெண்கள் சிரமப்படுகின்றனர். செவ்வாய்ப்-பேட்டை சாலையில் கீறல் போட்டு, 45 நாட்களாகியும் சாலை புதுப்பிக்காததால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
பூங்கொடி(தி.மு.க.,): பாவடி உயர்நிலைப்பள்ளி, மழைக்காலங்-களில் மினி குளமாக மாறுவதால், 'பேவர் பிளாக்' கல் பதிக்க வேண்டும். தெருவுக்கு தலா, 15 நாய்கள், 'உலா' வந்து தினமும், 2 பேரை கடிப்பதால், கட்டுப்படுத்த வேண்டும்.
குணசேகரன்(தி.மு.க.,): 43வது வார்டில் சாலை அமைக்க ஒப்-பந்தம் விட்டு ஒன்றரை ஆண்டாகியும், இன்னும் சாலை போடப்-படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், ஒப்பந்ததாரருக்கு ஆதர-வாக பதில் அளிக்கின்றனர். அதேபோல் வார்டு மாறி வரி வசூ-லிப்பதை கேட்டாலும் அலட்சியம் காட்டுகின்றனர்.
மேலும்
-
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விழா ; தாமரை பிரதர்ஸ் நுால் அறிமுகம்
-
2025 இந்தியாவின் டாப் 10 செய்திகள் இவை தான்!
-
விஐபி தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்: ஓர் சிறப்பு அலசல்!
-
உத்தராகண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது; பயணிகள் 7 பேர் பலி
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு
-
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை; அண்ணாமலை