தொழில் துறை உற்பத்தி; நவம்பரில் 6.70% வளர்ச்சி
புதுடில்லி: கடந்த நவம்பர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.70 சதவீதமாக அதிகரித்துள்ளது என, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், கடந்த 2023 நவம்பரில் 11.90 சதவீதமாக இருந்ததே அதிகபட்ச வளர்ச்சியாகும். வளர்ச்சி கடந்த அக்டோபர் மாதத்தில் 0.50 சதவீதமாகவும், கடந்தாண்டு நவம் பரில் 5 சதவீதமாகவும் இருந்தது. தயாரிப்பு மற்றும் சுரங்க துறைகளின் சிறப்பான செயல்பாடுகளே கடந்த மாத தொழில் துறை உற்பத்தி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்தாண்டு நவம்பரில் 5.50 சதவீதமாக இருந்த நிலையில், இந்தாண்டு நவம்பரில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுரங்கத்துறை வளர்ச்சி 1.90 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக உயர்ந்து உ ள்ளது.
எனினும், மின்சார துறை வளர்ச்சி 4.40 சதவீதத்திலிருந்து மைனஸ் 1.50 சதவீதமாக சரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், சராசரி தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 3.30 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4.10 சதவீதமாக இருந்தது.
மேலும்
-
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விழா ; தாமரை பிரதர்ஸ் நுால் அறிமுகம்
-
2025 இந்தியாவின் டாப் 10 செய்திகள் இவை தான்!
-
விஐபி தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்: ஓர் சிறப்பு அலசல்!
-
உத்தராகண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது; பயணிகள் 7 பேர் பலி
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு
-
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை; அண்ணாமலை