ஐந்தாவது வெற்றி நோக்கி இந்தியா: இலங்கையுடன் கடைசி மோதல்
திருவனந்தபுரம்: இந்தியா, இலங்கை பெண்கள் அணிகள் மோதும் 5வது 'டி-20' போட்டி இன்று நடக்கிறது. இதில் அசத்தினால் இந்திய அணி 5-0 என தொடரை முழுமையாக வெல்லலாம்.
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 4-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இன்று, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் 5வது, கடைசி போட்டி நடக்கிறது.
ஷைபாலி நம்பிக்கை: இந்திய அணிக்கு பேட்டிங்கில் ஷைபாலி வர்மா (236 ரன்), துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா (120) ஜோடி நம்பிக்கை தருகிறது. நான்காவது போட்டியில் அரைசதம் கடந்த இவர்கள், மீண்டும் நல்ல துவக்கம் தரலாம். கடந்த போட்டியில் 3வது இடத்தில் களமிறங்கி 16 பந்தில் 40 ரன் விளாசிய ரிச்சா கோஷ், மீண்டும் கைகொடுக்கலாம். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.
'வேகத்தில்' ரேணுகா சிங் (4 விக்.,) ஆறுதல் தருகிறார். 'சுழலில்' தீப்தி சர்மா (4), ஸ்ரீ சரணி (4), வைஷ்ணவி சர்மா (4) கூட்டணி மீண்டும் அசத்தலாம். இன்று தமிழக வீராங்கனை கமலினி அறிமுகமாகலாம்.
ஏற்கனவே தொடரை இழந்த சோகத்தில் உள்ள இலங்கை அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் சமாரி (101 ரன்), ஹாசினி (100), ஹர்ஷிதா (76) ஆறுதல் தருகின்றனர். பவுலிங்கில் கவிஷா (2), காவ்யா (2) கைகொடுத்தால் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கலாம்.
உலக கோப்பைக்கு 'ரெடி'
கடந்த 2024ல் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. சமீபத்தில் 50 ஓவர் உலக கோப்பை வென்ற உற்சாகத்தில் உள்ள இந்திய அணி, அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பைக்கு தயாராகி வருகிறது. இலங்கை தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இந்திய அணி, அடுத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக தலா 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
மேலும்
-
ரூ.79,000 கோடி தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல்
-
மாநகராட்சி நிதி பல கோடி ரூபாய் கொள்ளை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
-
வர்த்தக துளிகள்
-
தொழில் துறை உற்பத்தி நவம்பரில் 6.70% வளர்ச்சி
-
இறக்குமதி வரியை குறைத்த சீனா இந்திய ஏற்றுமதி உயர வாய்ப்பு
-
ஆஸ்திரேலிய வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருட்கள் அதிக ஏற்றுமதி