'காலி மது பாட்டில்களை திரும்ப பெற மாட்டோம்'
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 186 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 744 பேர் பணியாற்றி வருகின்றனர். மாவட்டம் முழு-வதும், இன்று முதல், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வாய்மொழி உத்த-ரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர், நேற்று திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க வேண்டும். காலி பாட்டில்களை திரும்ப பெற டாஸ்மாக் தொழிலாளர்களை பயன்படுத்தாமல், ஒப்பந்ததா-ரர்களை பயன்படுத்த வேண்டும். போதிய இடவ-சதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும், காலி பாட்டில்களை திரும்ப பெறமாட்டோம் என, முடிவு செய்தனர். இது தொடர்பாக, டாஸ்மாக் தொழிலாளர்கள் அனைவரும் கையெழுத்திட்டு, நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவ-லகத்திற்கு சென்று உதவி மேலாளர் மகேந்திர-னிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
மேலும்
-
புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்; தர்மேந்திர பிரதான் பேட்டி
-
மயானத்துக்கு உரிமை கோரும் வக்ப் கலெக்டருக்கு 'ஐகோர்ட் நோட்டீஸ்'
-
வீடு தேடி வரும் நர்சிங் சேவைகள்
-
கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்
-
திமுக மாநாட்டுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள்; பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணியர்!
-
தெரு மாடுகளுக்கு ரூ.48 லட்சத்தில் காப்பகம்; மாநகராட்சி ஏற்பாடு