திமுக மாநாட்டுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள்; பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணியர்!
- நிருபர் குழு -
பல்லடத்தில் நடந்த தி.மு.க. மாநாட்டுக்கு அரசு பஸ்கள் திருப்பி விடப்பட்டதால் பொள்ளாச்சி, உடுமலை பஸ் ஸ்டாண்டில் பயணியர் பல மணி நேரம் காத்திருந்து அதிருப்தியடைந்தனர்.
பல்லடத்தில் தி.மு.க. மகளிரணி மாநாடு நேற்று நடந்தது. இதற்காக, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து, கட்சியினர், பொதுமக்கள் அழைத்து செல்லப்பட்டனர். பெண்களுக்கு, சுடிதார், புடவை என தி.மு.க. கட்சி நிற உடையில் அழைத்துச் சென்றனர். இதற்காக, பெரும்பாலும் அரசு பஸ்களே பயன்படுத்தப்பட்டன. கிராமப்புறங்கள், புறநகர் செல்லும் பஸ்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், பஸ் ஸ்டாண்டில் பயணியர் பஸ் இல்லாமல், பல மணி நேரம் காத்திருந்து அதிருப்தியடைந்தனர்.
காத்திருக்கும் நிலை
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆளுங்கட்சியாக தி.மு.க. இருப்பதால், மாநாடு, முதல்வர் பங்கேற்கும் விழா என்றால், அரசு பஸ்களை பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது.நேற்று நடந்த மாநாட்டுக்கு அரசு பஸ்களில் கட்சி கொடியை கட்டி அழைத்து சென்றதால், பலர் பஸ்கள் கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால், பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பஸ் வருகைக்காக மக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். இதுபோன்று பொதுமக்களுக்கு நெருக்கடி தரும் வகையில் செயல்படாமல், அரசு பஸ்களை கட்சி நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
நகரிலும் நெரிசல்
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், தமிழக முதல்வர், அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடந்தால், பொள்ளாச்சியில் உள்ள போலீசாருக்கு அங்கு பணி ஒதுக்கப்படுகிறது. இதனால், இங்கு விரல் விட்டு எண்ணும் அளவிலேயே போலீசார் பணியில் இருப்பதால், நெருக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று போக்குவரத்து போலீசார் இல்லாத நிலையில், நெரிசல் அதிகரித்து அவசர சிகிச்சைக்கு கூட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
உடுமலை பல்லடத்தில் நடந்த தி.மு.க., மகளிர் மாநாட்டுக்கு, உடுமலை ஒன்றியம், கிளைக்கழகம் வாரியாக அனைத்து பகுதிகளிலிருந்தும், பெண்கள் அழைத்துச்செல்லப்பட்டனர். இதற்காக, நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இயக்கப்பட்ட, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மாநாட்டிற்கு செல்லும் பெண்களை அழைத்துச்செல்ல அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், உடுமலையிலிருந்து கோவை, திருப்பூர் , பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல குறைந்த பஸ்களே இயக்கப்பட்டதால், பல மணி நேரம் பயணியர் காத்திருந்தனர். வந்த ஒரு சில பஸ்களிலும், நெரிசலுடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.
அதே போல், கிராமங்களுக்கு இயக்கப்பட்ட அரசு, தனியார் பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர் விடுமுறை, புத்தாண்டு காரணமாக, வெளியூருக்கு செல்ல ஆயிரக்கணக்கான மக்கள், உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில் நேற்று காலை முதல் காத்திருந்தனர்.
நீலகிரியிலும் இதே நிலை!
நீலகிரியில் அரசு பஸ்கள், பல்லடம் தி.மு.க., மாநாட்டிற்காக அனுப்பப்பட்டதால், உள்ளூர் பயணிகள் 2:00 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து, அவதிக்குள்ளாகினர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற, தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் மகளிரை அதிகளவில் பங்கெடுத்து வைப்பதற்காக, நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பஸ்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நீலகிரியில் திமுக கட்சியினர் மகளிரை அழைத்து செல்ல அதிக தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும், அரசு பஸ்களும் அனுப்பப்பட்டதால் காலை நேரத்தில், பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக, கோத்தகிரியில் இருந்து பஸ்கள் இயக்காததால், காலை 8:30 மணியிலிருந்து 10: 40 மணி வரை எடப்பள்ளி உட்பட சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் இவ்வழியாக வந்த வாகனங்களில் டிரிப் கேட்டு சென்றனர்.
கிராம மக்கள் அவதி
இதே போல உட்லண்ட்ஸ் உட்பட பெரும்பாலான கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இல்லாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர். குன்னுார் பஸ் ஸ்டாண்டிலும் நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்தனர். குன்னூர் டவுன் பஸ் உட்லண்ட்ஸ் பகுதிக்கு மாற்றி இயக்கப்பட்டது.
இது குறித்து, குன்னூர் மக்கள் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், ''ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் 165 பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் 30-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், தமிழக முதல்வரின் கட்சி நிகழ்ச்சிக்காக கட்சியினரை அழைத்து செல்ல கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்ட போது, காலை 10:30 மணிக்கு இயக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். மக்களின் நலனை காக்க வேண்டிய அரசு, மக்களுக்காக இயக்கப்படும் அரசு பஸ்களை கட்சியினரின் பயன்பாட்டிற்காக மாற்றியது அதிருப்தியை அளிக்கிறது,'' என்றார்.
விடுப்பா, விடுப்பா. மக்களின் வரிப்பணத்தில் இருந்து பொங்கலுக்கு ரெண்டாயிரம் ஓவாய், தேர்தல் சமயத்தில் ரெண்டாயிரம் ஓவாய், குவாட்டர், கோழிப் பிரியாணி, கொலுசு, தோடு, அண்டா, குண்டா எல்லாம் கொடுத்தால் எல்லாமே சரியாகிப் போய்விடும்
இதுக்கெல்லாம் அந்த நிதிமன்றம் ஸாரி நீதிமன்றம் எதுவுமே சொல்லாதா? அல்லது இந்த கொள்ளைக்கூட்டத்துக்கு எந்த சட்ட திட்டமும் பொருந்தாதா? ரோட்டில் துளையிட்டு கொடிக்கம்பம் நடுகிறார்கள். இதனால் ரோடு பாழாக்கப்படுவதுடன், கொடிக்கம்பம் வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் விபத்து ஏற்படுகிறது. அதுபோல் பொதுமக்களின் உபயோகத்துக்கு உள்ள பேருந்தை தனிப்பட்ட கட்சி கூட்டத்துக்கு அதிகாரிகளை மிரட்டி கொண்டு செல்வதால் பொதுமக்களுக்கு எவ்வளவு அவதி? இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லும் நிதிமன்றங்களுக்கு ஸாரி நீதிமன்றங்களுக்கு ஒரு ராயல் சல்யூட். காசு, பணம், துட்டு, மணி, மணி.
ஏதோ பாஜகவினர் யோக்கிய சிகாமணிகள் போல
2021இல் செய்த பாவத்தின் விலை. கொடுத்துதான் ஆகவேண்டும். . மக்களே வருகாலங்கில்லாவது பாவம் செய்வதை நிறுத்தங்கள். இந்தமாதிரியான அவலங்கள் தொடராமல் இருக்கவைப்பது அந்தந்த மக்களின் கைகளில் மட்டுமே இருக்கிறது .
படிச்சி முடிச்சிட்டு என்ன செய்ய போகிறார்கள். மீண்டும் 1000 அல்லது 2000 வாங்கி கொண்டு ஓட்டை விற்க போகிறார்கள்.
ஆமாம். ரோஷம் மானம் இல்லா ஜென்மங்கள்...₹௨௦௦ குவார்ட்டர் பிரியாணிக்கு ஓட்டு போடும்
இந்த செய்தியை திராவிட சார்பு ஊடகங்கள் கண்டு கொள்ளாது .மதுவினால் லட்சக்கணக்கான தமிழக குடும்பங்கள் வாழ்விழந்து நிர்க்கதியாய் நிற்கும் போது ,அது பற்றிய ஒரு தீர்மானம் இல்லாமல் மத்திய அரசை குறை சொல்ல ஒருமாநாட்டு கூட்டம் .இளவயதில் போதைக்கு அடிமைகள் தமிழகத்தில் அதிகம் .இது குறித்தும் மாநாட்டில் தீர்மானம் இல்லை .பெண்களுக்கு பாலியல் சீண்டல் அதிகரித்து ,போக்சோ குற்றங்கள் இணைய சீரழிவினால் தமிழகத்தில் மிகு எண்ணிக்கையில் உள்ளது . இது குறித்தும் மாநாட்டில் தீர்மானம் இல்லை.. தூய்மை பணியாளர்கள் ,போக்குவரத்து ஊழியர்கள் ,இடை நிலை ஆசிரியர்கள் ,விவசாயிகள் மற்றும் வணிகர்கள் வெறுக்கும் ஆட்சியை திராவிட மாடல் என நடத்துகிறார் ஸ்டாலின் அவர்கள் / ஆனால் இது எதுவும் எங்களுக்கு வருத்தம் /கஷ்டம் /பாதிப்பு /வெறுப்பு /துன்பம் /குறைகள் இல்லை என -இதோ தமிழக தாய்க்குலங்கள் குறிப்பாக பொள்ளாச்சி ,நீலகிரி ,கோவை மாவட்ட த்தை சேர்ந்தவர்கள் ,திமுக மகளிரணி நடத்தும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இத்தகைய நிகழ்வுகள் எங்களுக்கு சிறிதளவும் /எள்ளளவும் பொருட்டல்ல என நிரூபித்து விட்டனர் .
உயர்நீதிமன்ற நீதிபதி இந்த அநீதியை தாமாக முன்வந்து அரசு மீது வழக்கு தொடர வேண்டும்
ஆளும் கட்சி மாநாடு நடத்த பொது போக்குவரத்து பஸ்களை பயண்படுத்தலாமா.. பயணிகள் பஸ்ஸை எந்த அடிப்படையில் செய்கிறார்கள்.இதற்கு சட்ட வழி என்ன????
வோட்டு போடும் பொது பயணியர் இதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
இதுதான் திராவிட மாடல்மேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்