தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7.32 லட்சம் பேர் மனு!
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சத்து 32 ஆயிரத்து 367 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த அக்., 27ல் துவங்கியது. .இந்த கணக்கெடுப்புக்கு பின், தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 19ம் தேதி வெளியிடப்பட்டது. 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பட்டியலில் இல்லாதவர்கள்,தங்களின் பெயர் சேர்க்க படிவம் 6ஐ பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம். பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்போர், படிவம் 7ஐயும், முகவரி மாற்றத்துக்கு படிவம் 8ஐயும் ஜன. 18க்குள் வழங்கலாம் எனவும் தேர்தல் கமிஷன் கூறியிருந்தது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, இதுவரை இதுவரை 7 லட்சத்து 32 ஆயிரத்து 367 பேர் விண்ணப்பித்துள்ளனர் தமிழக தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பெயர் நீக்கம் செய்ய கோரி 9 ஆயிரத்து 450 பேர் விண்ணப்பத்தை வழங்கி உள்ளனர்.
உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, விண்ணப்பம் கொடுத்தவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என தமிழக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
மேலும்
-
தி.மு.க., மகளிர் மாநாடு நடந்த இடத்தில் கடும் சுகாதார சீர்கேடு
-
சிலிகுரி கோழி யானையாக மாற வேண்டும்!: வங்கதேசம் வாலை நறுக்க சத்குரு யோசனை
-
பல்வேறு துறைகளில் புதிய சீர்திருத்தங்கள்; வளர்ச்சிப் பயணத்திற்கு உத்வேகம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஓய்வூதிய திட்டங்கள் ஆராயும் குழு முதல்வரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு!
-
திமுக கூட்டணியில் புகைச்சல்: இபிஎஸ் பேச்சு
-
காசோலை மோசடி வழக்கு: மதிமுக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை