யார் சொத்துக்கும் ஆசைப்படாத சூழல் தமிழகத்தில் வர வேண்டும்: துணை ஜனாதிபதி பேச்சு

9


ராமேஸ்வரம்: ''தமிழகத்தில் யார் சொத்துக்கும் ஆசைப்படாத சூழல் வர வேண்டும் என சிவனை வேண்டிக் கொள்கிறேன்'', என காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இன்னொரு கண்



ராமேஸ்வரத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்த தேசம் வாழ்க என சொல்வதால், நாம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் இல்லை. தேசம் நமது ஒரு கண் என்றால், இன்னொரு கண் தாய் மொழி நம்முடைய தமிழ் தான். அதை யாராலும் மாற்ற முடியாது.

பெருமை



@block_B@' தொன்மையான காசி நகரமும், உலகத்தின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழும் இணைகிறது என்று சொன்னால் அது காசி தமிழ் சங்கமம் ' என பிரதமர் மோடி கூறியுள்ளார். காசி தமிழ் சங்கமத்தின் 4வது ஆண்டு நிறைவு விழாவை, தமிழ் மண்ணில் அதுவும் சிவமயமான ராமேஸ்வரத்தில், அப்துல் கலாமை தந்த புண்ணிய பூமியில் கொண்டாடுவது நமது அனைவருக்கும் பெருமைblock_B
Latest Tamil News


காசியும் ராமேஸ்வரமும் யாராலும் பிரிக்க இயலாத உறவை கொண்ட புனித நகரங்கள். இதனால் தான் பிரதமர் மோடி காசி தமிழ் சங்கமத்தின் துவக்கவிழா காசி என்று கூறினால், நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடக்க வேண்டும் என அழைத்துள்ளார். ராமேஸ்வரம் மண்ணில் காசியும் தமிழகமும் சங்கமிக்கின்ற மாபெரும் விழாவாக இது நடக்கிறது.

பக்திப்பாடல்



காசி உலகின் ஆன்மிக தலைநகர். பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக அது அன்றைக்கும் இன்றும் ஒலித்து வருகிறது. அங்கே, நாலாடியார்களின் தேவாரமும் திருவாசகமும் ஒலிக்கிறது என்று சொன்னால், அதேநேரத்தில் கபிலரின் பக்திபாடலும் ஒலிக்கிறது.அத்தகைய மகத்தான திருத்தலம். எல்லாம் சிவமயம். அதனால் தான் காசியும் ராமேஸ்வரத்திலும் மகத்தான சிவாலயங்கள் எழும்பியுள்ளது.
Latest Tamil News

வரலாறு



நிறைய பேருக்கு வரலாறு தெரிவதில்லை.
@quote@ முகலாய மன்னர்கள் காசி ஆலயத்தை அழித்து ஒழித்த போது தமிழகத்தில் இருந்தும், பாண்டிய நாட்டில் இருந்தும் பெருந்திரளான வீரர்கள் மகத்தான புண்ணிய பூமியை மீட்டெடுக்க போர் புரிய சென்றார்கள் என்பது தான் உண்மையான வரலாறு. quote


அப்படி நாட்டின் எந்த மூலையில் நம்முடைய தர்மத்துக்கு நாட்டின் தன்மானத்துக்கு இழுக்கு என்றுவரும் போது நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

தர்மத்தின்படி



அதனால்,'செப்பு மொழி 18 உடையாள். எனினும் சிந்தனை ஒன்றுடையாள்' எனமகாகவி பாரதியார் கூறியுள்ளார்.

எத்தனை மொழிகளில் பேசினாலும், அந்த மொழிகளில் இருக்கும் ஒரே அர்த்தம் தர்மத்தின் பிரகாரம் நாம் வாழ வேண்டும் என்ற உயர்ந்த தத்துவம் தான் இந்தியாவையே ஒருங்கிணைந்த தேசமாக மாற்றி உள்ளது

இதனால் தான்

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்

சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு

சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் எனப்பாடியுள்ளார்.

அவர் உணர்வுகளை எண்ணிப் பாருங்கள். இந்த தேசத்தை பற்றி சிந்தித்துள்ளார்.

பாரதியின் கனவு



@block_Y@எட்டயபுரத்தில் இருந்த கவி காசிக்கு சென்றதோடு மட்டுமல்லாமல் காசி அரசவையிலும் அலங்கரித்து இருந்தது எத்தகைய பெருமை பெற்று தந்துள்ளான் என்பதை கருத வேணடும். பாரதியின் கனவை பிரதமர் மோடி தொலைநோக்கு திட்டங்களால் நிறைவேற்றி வருகிறார். எந்த திட்டமாக இருந்தாலும் தமிழர்களின் பெருமையை இந்திய தேசத்தை நிலை நாட்டும் வகையில் இருக்கிறது. block_Y
Latest Tamil News

உணர்வு



கடந்த நவ.,30 மன் கி பாத் நிகழ்ச்சியில் காசி தமிழ் சங்கமம் பற்றி பிரதமர் மோடி அற்புதமாக பேசி உள்ளார். அதில் அவர் 'தமிழ் கலாசாரம் உயர்வானது தமிழ் மொழி மேன்மையானது. பாரத தேசத்தின் பெருமைகளில் ஒன்று தமிழ்' எனக்குறிப்பிட்டார். அதனால் காசி தமிழ் சஙகமம் மூலம் கற்கும் திட்டத்தை தேசத்திற்கு தந்துள்ளார். தமிழ் உணர்வை பெற வேண்டும் என கேட்டுள்ளார்.

கவர்னர் தமிழில் பேசியதைகேட்ட போது நானும் ஹிந்தியை கற்றுக் கொண்டு அவரளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவு பேச வேண்டும் என்ற உணர்வு வந்தது.


முந்தைய காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு உள்ளேன். காசியில் கோவிலுக்கு இக்கட்டான சூழ்நிலை வந்த போது, தினமும் பூஜை பொருட்களை கொண்டு செல்ல தமிழகத்தை சேர்ந்த நாட்டு செட்டியாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.காசியில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சத்திரம் ஒன்றை வைத்துள்ளனர். அவர்களின் பழைய சத்திரத்தில் தங்கி உள்ளேன். உணவருந்தி உள்ளேன்.


அவர்களின் புதிய சத்திரம் கட்டுவதற்கான 300 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவர்கள் பிரதமர் மோடியிடம் புகார் அளித்தனர். அவர்களை முதல்வரை சந்திக்கும்படி, பிரதமர் கூறினார். அவர்களும் முதல்வரை சந்தித்து முறையிட்டனர். முதல்வரும் ' ஆவணங்களை கொண்டு வாருங்கள். சரியானது என ஆராயப்படும். உண்மையில் அது உங்களுக்கு பாத்தியப்பட்ட என்றால், அது உங்கள் கைக்கு வரும்,' என்றார்.

தங்குமிடம்



நாட்டுக்கோட்டை செட்டியார்கள் எங்கு உள்ளார்களோ அங்கு தர்மம் இருக்கும். நியாயம் இருக்கும். தங்களுக்கு அல்லாத ஒன்றை தங்களது என சொல்லியதாக சரித்திரம் இல்லை. எல்லா ஆவணங்களையும் காட்டிய போது, இந்த இடம் உங்களுக்கானது எனக்கூறி, 48 மணி நேரத்தில் மீட்டுக் கொடுக்கப்பட்டு நாட்டுக்கோட்டை செட்டியர் வசமானது. இன்று மிகப்பெரிய தங்கும்இடமாக உருவெடுத்துள்ளது.

Latest Tamil News

பிரார்த்தனை



@block_G@தமிழகத்தில் யார் சொத்துக்கும் ஆசைப்படாத சூழல் வர வேண்டும் என சிவனை வேண்டிக் கொள்கிறேன். இப்படி வேண்டுவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.' உலகின் உன்னத நிலைக்கு நமது பாரதம் வர வேண்டும். உன்னத நிலைக்கு பாரத நாடு வரும்போது தமிழகத்திலும் மகத்தான முன்னேற்றம் வர வேண்டும். உலகத்தின் உச்சத்தை பாரத தேசம் தொடும் போது, பாரதத்தின் உச்சத்தை தமிழகம் தொட வேண்டும்,' என பிரார்த்தனை செய்கிறேன். block_G


@quote@நான் துணை ஜனாதிபதியாக உயர்ந்துள்ளதாக கூறினர். எந்த இடத்தில் இருந்தாலும் நாம் என்றைக்கும் அகங்காரம் கொண்டவர்களாக இருக்கக்கூடாது. மக்களில் ஒருவராய் உங்களில் ஒருவராய் இருப்பேன் என்று கூறுகிறேன். quote

வளமான தமிழகம், வளமான பாரதம் இன்றைக்கும் என்றைக்கும் பாரத தேசம் ஒன்று தான். எந்த தீயசக்தியாலும் பாரத தேசத்தை பிளவுபடுத்த முடியாது. ஒன்றுபட்ட பாரத தேசமே நமதுஉயிர்மூச்சு. இவ்வாறு துணை ஜனாதிபதி பேசினார்.

Advertisement