உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறும்; ஆங்கில புத்தாண்டு உரையில் அதிபர் புடின் நம்பிக்கை
மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறும் என அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அதிபர் புடின் கூறியதாவது: உங்கள் பூர்வீக நிலத்திற்காகவும், உண்மைக்காகவும், நீதிக்காகவும் போராடும் பொறுப்பை நீங்கள் (பாதுகாப்பு படையினர்) ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். இந்த புத்தாண்டு இரவில் ரஷ்யா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உங்களுடன் இருப்பதாக நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறும். புத்தாண்டில் நமது அனைத்து வீரர்கள் மற்றும் தளபதிகளுக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் உங்களை நம்புகிறேன். ரஷ்யாவின் மீதான உண்மையான, தன்னலமற்ற மற்றும் அர்ப்பணிப்புள்ள அன்பினால் ரஷ்யர்கள் ஒன்றுபட்டுள்ளனர். இவ்வாறு அதிபர் புடின் கூறினார்.
போரிஸ் யெல்ட்சின் பதவி விலகிய பின்னர், 1999ல் புத்தாண்டுக்கு முன்னதாக புடின் ரஷ்ய அதிபராக பொறுப்பேற்றார். இன்றுடன் அதிபர் புடின் ஆட்சிக்கு வந்து 26வது ஆண்டு நிறைவு பெற்றது.