டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகள் சாதகமாக இருப்பின் 26,300ஐ தாண்டலாம்

ஆரம்பத்தில் இருந்தே ஏற்றம் கண்ட நிப்டி, நாளின் இறுதியில் 190 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் அனைத்தும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.41 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.78 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தது.

Latest Tamil News
19 துறை சார்ந்த குறியீடுகளில், 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஆயில் அண்டு காஸ்' குறியீடு, அதிகபட்சமாக 2.66 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.30 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Latest Tamil News
வர்த்தகம் நடந்த 3,250 பங்குகளில், 2,221 ஏற்றத்துடனும்; 935 இறக்கத்துடனும்; 94 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஏற்றம் தொடர 26,300 என்ற லெவலை தாண்ட வேண்டும். செய்திகள் சாதகமாக இருந்தால் இது சாத்தியம். 25,900-க்கு கீழ் இறங்கினால் சற்று இறக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Advertisement