கேரளாவில் காங்., இடதுசாரிகள் ஆதிக்கம் முடிவுக்கு வரும்: பிரதமர் மோடி திட்டவட்டம்

4

புதுடில்லி: "டில்லியில் கூட்டணி, கேரளாவில் எதிரிகள் என நடிக்கும் காங்கிரஸ், இடதுசாரிகளின் மேட்ச் பிக்சிங் விரைவில் முடிவுக்கு வரும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.



கேரள தலைநகர் திருவனந்தபுரம் மேயராக பொறுப்பேற்ற வி.வி. ராஜேஷுக்கும், பாஜ தலைவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: பண்டிகைக் காலத்தின் நடுவிலும், 2026ம் ஆண்டு தொடங்கும் போதும், திருவனந்தபுரம் நகரின் மேயராக வி.வி. ராஜேஷ் பதவியேற்றதும், ஜி.எஸ். ஆஷா நாத் துணை மேயராக பதவியேற்றதும் வரலாறு படைக்கப்பட்டது. இதற்காக உங்களையும், ஆஷாவையும் வாழ்த்த விரும்புகிறேன்.


பல ஆண்டுகளாக கேரளாவில் பாஜ தொண்டர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். காங்., இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்களின் மோசமான நிர்வாகத்தை அனைவரும் பார்த்து இருக்கிறோம். ஊழல் மற்றும் கொடூரமான வன்முறை கலாசாரத்தை உருவாக்கியுள்ளனர். டில்லியில் கூட்டணி, கேரளாவில் எதிரிகள் என நடிக்கும் காங்கிரஸ், இடதுசாரிகளின் மேட்ச் பிக்சிங் விரைவில் முடிவுக்கு வரும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேயர் பெருமிதம்




இந்த கடிதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கேரளா மேயர் வி.வி. ராஜேஷ் கூறியிருப்பதாவது: இந்த அங்கீகாரம், பிரதமர் மோடி கேரளாவிற்கு அளித்த புத்தாண்டு பரிசு. திருவனந்தபுரத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், கேரளாவில் உள்ள பாஜ தொண்டர்களின் பல ஆண்டுக்கால கடின உழைப்பின் விளைவாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement