ஏரியில் அளவை மீறி மண் எடுத்த 9 விவசாயிகள் மீது வழக்கு பதிவு
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே, பொம்-மஹள்ளி பஞ்.,ல் ஒசஹள்ளி ஏரி உள்ளது. இதில் விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க, அப்பகுதி விவசாயிகள் காரிமங்கலம் தாசில்தார் அலுவல-கத்தில் ஆன்லைன் மூலம், பதிவு செய்து அனு-மதி பெற்று கடந்த டிச., 1 முதல், 25 வரை மண் எடுத்தனர்.
இதில், அனுமதித்த அளவை விட கூடுதலாக மண் எடுத்தது தணிக்கையில் தெரிய-வந்தது. இதையடுத்து, புதுக்குடியானுாரை சேர்ந்த பார்த்திபன், 48, குட்டூர் வடிவேல், 37, ராஜாதோப்பு குமார், 35, சிக்கதிம்மனஹள்ளி மாரியப்பன், 45, கீழ்கொள்ளுபட்டி பசுபதி, 25, கிருஷ்ணகிரி மாவட்டம், தாலியூரை சேர்ந்த சூரிய பிரகாஷ், 25 உட்பட, 6 பேர் மீது, பொம்ம-ஹள்ளி
வி.ஏ.ஓ., பீமன், போலீசில் புகார் அளித்தார். அதேபோல், காரிமங்கலம் அருகே பூனாத்தனாஹள்ளி பஞ்., ஜம்பேரி ஏரியில் விவ-சாய பயன்பாட்டிற்காக கடந்த டிச., 7 முதல், 26
வரை, அனுமதித்த அளவை விட விவசாயிகள் மண் எடுத்தனர்.
இதையடுத்து, காரியமங்கலம் அருகே பூலாப்பட்டியை சேர்ந்த பெரிசிகவுண்டர், 32, பெரியாம்பட்டி வடிவேல், 52, மொளப்பன-ஹள்ளி சென்ன கேசவன், 45, ஆகியோர் மீது, பூனார்த்தனஹள்ளி வி.ஏ.ஓ., அருண்குமார், போலீசில் புகார் அளித்தார்.
இரு புகார்களின் படி, மொத்தம், 9 விவசாயி கள் மீது, காரிமங்கலம் போலீசார் வழக்குப்
பதிந்துள்ளனர்.
மேலும்
-
புத்தாண்டு கொண்டாட்டத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷ்யர்கள் 24 பேர் பலி
-
போதையில் வந்த ஏர் இந்தியா விமானி: தடுத்து நிறுத்திய கனடா அதிகாரிகள்
-
நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் வம்சாவளி இந்தியர் மம்தானி
-
டிச., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி: 6.1 சதவீதம் அதிகம்
-
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசை அழிக்கும்; நயினார் நாகேந்திரன்
-
கேரளாவில் காங்., இடதுசாரிகள் ஆதிக்கம் முடிவுக்கு வரும்: பிரதமர் மோடி திட்டவட்டம்