புத்தாண்டு கொண்டாட்டத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷ்யர்கள் 24 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உக்ரைன் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதல் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அமெரிக்கா பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் கெர்சான் பிராந்தியத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது உக்ரைன் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக கெர்சான் பகுத கவர்னர் விளாடிமிர் சால்டோ கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நமது எதிரிகள் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தினர். கருங்கடல் அருகேயுள்ள கோர்லி பகுதியில் இருந்த ஓட்டல் மற்றும் விடுதியில் இந்த தாக்குதல் நடத்தியது. முதற்கட்டமாக இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதும், 50 பேர் காயமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், ரஷ்யா வான் பாதுகாப்பு அமைப்பு உக்ரைன் அனுப்பிய 168 டிரான்களை தாக்கி அழித்தது. இவ்வாறு அவர் கூறினார்.
கொழுப்புதான்
ஆயுத விற்பனைக்காக அப்பாவி மக்கள் இறக்கின்றனர் .. பிரச்சனை என்று வந்த உடனே , ஜெலன்ஸ்கி பதவி விலகி இருக்க வேண்டும். ராணுவமாவது ரஸ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கும். ஒரு சிலரின் லாபத்திற்காக , கோடிக்கணக்கான அப்பாவி மக்கள் சொத்துக்களை இழந்து , வாழ்க்கையை இழந்து, ஏகப்பட்ட பேர் இறந்து.. என்ன சொல்ல.. இந்த மனித மிருக ஜென்மங்களை..
புட்டின் வீட்டில் குண்டு போட்டாதான் தலிவருங்க கதறுவாங்க. சாமானிய மக்கள் செத்தால் கண்டுக்க மாட்டாங்க.
அமெரிக்க ஐரோப்பா இருக்கும் வரை புவியியல் அரசியலில் பிரிவினை பிரச்சனை இருக்க தான் செய்யும். காமடி நடிகன் ஜெலஸ்கியிடம் மாட்டிக் கொண்டு உக்ரைன் அழிந்து கொண்டிருக்கிறது இனி ரஷ்யா சும்மா விடாது. நமக்கும் இது ஒரு பாடம்.
உண்மை...
உக்ரைன் நாட்டின் அழிவு கண்ணில் தெரிகிறது.
Looks like someone is desperate to provoke Russia to use nuclear weapons!
Ukraine will be decimated by Russian sure
இந்த ட்ரம்ப் ஆளும், ஜெலன்ஸ்கியும் போர் நிறுத்தம் பற்றி விவாதிப்பது போல் அப்பப்போ
சீன் போடுவது எல்லாமே சுத்த எமாத்து வேலை, நாடகம். ஜெலின்ஸ்கி பேச்சு வார்த்தையை
யூஸ் லெஸ் என்று பிறகு கமெண்ட் செய்வதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் டீல் எல்லாம்
போரை நிறுத்தக் கூடாது என்பது தான். இவர்களை உலகம் நம்பக் கூடாது. இது ட்ரம்பின்
இரட்டை வேடம். உக்ரைன் மூலம் ரஷ்யாவை அழிக்கும் வரை ஓயப் போவதில்லை.
Ukraine will vanish now putin will be very aggressiveமேலும்
-
கோவை, தேனி, தென்காசி, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை
-
சீர்மிகு தமிழகமாக மாற்றி பிரதமர் மோடியின் சபதத்தை நிறைவேற்றுவார் அமித்ஷா
-
மலை பாதைகளில் மண் சரிவு: மலை ரயில் ரத்து
-
தண்ணீரை பகிர்ந்து கொள்ளுமாறு எங்களிடம் நீங்கள் கேட்க முடியாது: பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் திட்டவட்ட பதில்
-
ஆசிரியர்களை வாட்டி வதைக்காதீர்கள்; போராட்டத்துக்கு சீமான் ஆதரவு
-
சிலரது சுயநலத்தால் அழிவின் பாதையில் காங்கிரஸ் செல்கிறது; யாரைச்சொல்கிறார் கரூர் ஜோதிமணி?