ரஷ்யா உக்ரைன் ட்ரோன் தாக்குதல் புத்தாண்டு கொண்டாடிய 24 பேர் பலி; 50 பேர் காயம்
மாஸ்கோ: ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு கெர்சன் பகுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது, உக்ரைன் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக நடத்திய தாக்குதலில், 24 பேர் உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர், நான்காவது ஆண்டை நெருங்கியுள்ளது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்தும், தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது. ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதிகளில் உக்ரைனிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கெர்சன் பகுதியில், உக்ரைன் படைகள் நேற்று முன்தினம் ட்ரோன் வாயிலாக தாக்குதலை நடத்தியது. கடற்கரை கிராமமான கோர்லி என்ற இடத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில், 24 பேர் உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மூன்று ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக மழை; தென்காசி, நீலகிரியில் அதிகம்!
-
தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
2025 டிசம்பரில் கார் விற்பனை அமோகம்: ஜிஎஸ்டி வரி குறைப்பால் புதிய சாதனை
-
ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு; 17 பேர் உயிரிழப்பு: 1,000 வீடுகள் சேதம்
-
மா.திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
மினி பஸ்சை சிறை பிடித்த ஆட்டோ டிரைவர்கள்