மா.திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், இலவச பஸ் பயண அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழுமையாக கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொள்ளவும், அனைத்து வகை மாற்றுதிறனாளிகளும் இருப்பிடத்தில் இருந்து பணி, பயிற்சி, தொடர் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல இலவச பஸ் பயண சலுகை அட்டை வழங்கப்படுகிறது.

இதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, பணி சான்றிதழ் மற்றும் பயிற்சி சான்றிதழ், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களில், TNEGA என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பித்து இலவச பயண அட்டை பெறலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement