ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு; 17 பேர் உயிரிழப்பு: 1,000 வீடுகள் சேதம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக, பனிப்பொழிவுக்கு இடையே கனமழை பெய்து வருகிறது. கபிசா, பர்வான், டாய்கண்டி, உருஸ்கான், கந்தஹார், ஹெல்மண்ட், பாட்கிஸ், பர்யாப், படக் ஷான், ஹெராத் உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்; 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 1,200 கால்நடைகள் உயிரிழந்ததாக ஆப்கன் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேத மதிப்பை அளவிட மதிப்பீட்டு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இறைவன் அழிவு சக்திகளை பல விதத்தில் கடுமையாக தண்டிப்பான். அதில் அப்பாவிகள் இறப்பது மாற்ற முடியாது. அப்பாவிகள் சிந்தும் ரத்தம், அவர்களை பல நூறு மடங்கு பாதிக்கும் என்பது உண்மை.
நம்ப ராசாங்கம் சும்மா இருக்காதே? நூறு கோடிக்கு மேல் மதிப்புள்ள உணவு, மருந்து ,துணிமணி ,மற்றும் மீட்புக் குளு எல்லாம் ரெடி பண்ணிடுவாங்களே பாம்புக்கு பால் வார்க்க ?
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்மேலும்
-
முதல்வர் என்னுடன் விவாதிக்க தயாரா? மத்திய அமைச்சர் முருகன் சவால்
-
தங்கம் வென்றார் திலோத்தமா: தேசிய துப்பாக்கி சுடுதலில்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
தென் ஆப்ரிக்க அணி அறிவிப்பு: 'டி-20' உலக கோப்பைக்கு
-
உஸ்மான் கவாஜா ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து
-
ஆஸ்திரேலிய ஓபனில் வீனஸ் வில்லியம்ஸ்: 'வைல்டு கார்டு' அனுமதி