ஜப்பான் 6.0 ரிக்டர் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பெரிய பாதிப்பு இல்லை
டோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்னதாக, 6.0 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் பதிவானது; ஆனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
கிழக்காசிய நாடான ஜப்பானின், கிழக்கு கடற்கரைப் பகுதியான நோடா நகருக்கு அருகே, இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. புத்தாண்டுக்கு சற்று முன்பு இரவு 11:26 மணிக்கு 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நோடாவில் இருந்து கிழக்கே 91 கி.மீ., தொலைவில், 19.3 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது.
நிலநடுக்கத்தின் போது உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இதேபோன்று திபெத்திலும், 3.4 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.
கடந்த டிசம்பர் 8-ம் தேதி ஜப்பானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 50 பேர் வரை காயமடைந்தனர்.
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக மழை; தென்காசி, நீலகிரியில் அதிகம்!
-
தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
2025 டிசம்பரில் கார் விற்பனை அமோகம்: ஜிஎஸ்டி வரி குறைப்பால் புதிய சாதனை
-
ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு; 17 பேர் உயிரிழப்பு: 1,000 வீடுகள் சேதம்
-
மா.திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
மினி பஸ்சை சிறை பிடித்த ஆட்டோ டிரைவர்கள்