தென் ஆப்ரிக்க அணி அறிவிப்பு: 'டி-20' உலக கோப்பைக்கு
ஜோகனஸ்பர்க: 'டி-20' உலக கோப்பை தொடருக்கான தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் (பிப். 7 - மார்ச் 8) நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. தென் ஆப்ரிக்க அணி, 'டி' பிரிவில் ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
இத்தொடருக்கான 15 பேர் கொண்ட தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக மார்க்ரம் நீடிக்கிறார். குயின்டன் டி காக், ரபாடா, மார்கோ யான்சென், நோர்க்கியா, டேவிட் மில்லர், கேஷவ் மஹாராஜ் என, கடந்த 2024ல் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில் விளையாடிய 7 பேர் மீண்டும் இடம் பிடித்தனர்.
பிரவிஸ், மபாகா, கார்பின் பாஷ், டோனி டி ஜோர்ஜி, ஜேசன் ஸ்மித், டொனோவன் பெரேரா, ஜார்ஜ் லிண்டே ஆகியோர் 'டி-20' உலக கோப்பைக்கு முதன்முறையாக தேர்வாகினர். 'மிடில்-ஆர்டர் பேட்டர்' டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 'டாப்-ஆர்டர் விக்கெட் கீப்பர் பேட்டர்' ரியான் ரிக்கிள்டன் தேர்வு செய்யப்படவில்லை.
தென் ஆப்ரிக்க அணி: மார்க்ரம் (கேப்டன்), கார்பின் பாஷ், டிவால்டு பிரவிஸ், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டோனி டி ஜோர்ஜி, டொனோவன் பெரேரா, மார்கோ யான்சென், ஜார்ஜ் லிண்டே, கேஷவ் மஹாராஜ், மபாகா, டேவிட் மில்லர், நிகிடி, நோர்க்கியா, ரபாடா, ஜேசன் ஸ்மித்.