பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்; ஜனவரி 28ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கும் என அறிவிப்பு
புதுடில்லி; பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கும் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 28ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
முதல் கட்டம் பிப்ரவரி 13ம் தேதி முடிவடைகிறது. மார்ச் 9ம் தேதி பார்லிமென்ட் மீண்டும் கூடுகிறது.
மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் விதத்தில் ஆக்கப்பூர்வமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இந்த கூட்டத்தொடரை எதிர்நோக்குகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களே காரணம்: பிரதமர் மோடி பேச்சு
-
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க போலீசாரை ஏவி அச்சுறுத்தல்; அண்ணாமலை கண்டனம்
Advertisement
Advertisement