திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க போலீசாரை ஏவி அச்சுறுத்தல்; அண்ணாமலை கண்டனம்
சென்னை: இடைநிலை ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின், தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, போலீசாரை ஏவி அச்சுறுத்துவதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை; கடந்த 16 நாட்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை தினந்தோறும் கைது செய்து, திமுக அரசு தனது சர்வாதிகார முகத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 7 பேர் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படாதது, திமுக ஆட்சியின் ஜனநாயக விரோத போக்குக்கு எடுத்துக்காட்டு.
ஆட்சிக்கு வருவதற்கு முன் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என திமுக கொடுத்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின், தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, காவல்துறையை ஏவி ஆசிரியர்களை அச்சுறுத்துகிறார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றத் துப்பில்லாத திமுக அரசு, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் ஆசிரியர்களை கைது செய்து, அவர்களின் குரலை அடக்கலாம் என்று நினைப்பது வெட்கக்கேடு. ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கைது செய்து மறைத்து வைத்தால் போராட்டம் நீர்த்து போய்விடும் என்ற திமுகவின் செயல்பாடு, ஜனநாயகத்தை திமுக எவ்வளவு அலட்சியமாக எண்ணுகிறது என்பதற்கான சாட்சி.
உடனடியாக கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும், சங்க நிர்வாகிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காவல்துறையை வைத்து மக்களை அச்சுறுத்தும் திமுகவின் எதேச்சதிகார அரசியலுக்கு தமிழக மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவில் ஒரு மயான அமைதி நிலவுகிறது. ஏன் என்று தெரியவில்லை.
naalai in the venkalam failure
திமுக வந்த பின் அரசியல் நிர்வாகம் மட்டும் தான் . தமிழக நிர்வாகம் முடங்கி கொண்டது. நிர்வாகம் இருந்தால் தான் தோல்வி அடையும். திராவிடம் முன் போலீஸ் அரை கால் சட்டை. கம்பீரம். லத்தி, துப்பாக்கி. கலெக்டர் போன்ற அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு. பணி ஒழுங்கு அதனை மாற்றி கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை 24 மணி சுற்றுதல். வன்கொடை பணம் , பொருள் பத்திரமாக இடம் மாற்ற உதவுதல் போன்ற ஏகப்பட்ட வேலைகள். திமுக விரும்பும் உண்மையை பொய் ஆக்கி, பொய்யை உண்மையாக்குதல் மிக கடினமானது.
போதை தமிழகத்தின் இளம் தலைமுறையினரை சீரழிக்கிறது.மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்