தமிழக பவுலர்கள் ஏமாற்றம்

சாகர்: இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 'கூச் பெஹார்' டிராபி தொடர் நடத்தப்படுகிறது. இதன் அரையிறுதி (4 நாள்), மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று துவங்கியது. 'நடப்பு சாம்பியன்' தமிழகம், மத்திய பிரதேச அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற மத்திய பிரதேச அணி பேட்டிங் செய்தது.
மத்திய பிரதேச அணிக்கு ஆர்யன் (39), ஹர்ஷித் (0) ஜோடி துவக்கம் தந்தது. அர்னவ் (17), கேப்டன் மனல் சவுகான் (18) கைவிட்டனர். யாஷ்பர்தன் 83 ரன் எடுத்தார். அடுத்து இணைந்த ஸ்பார்ஷ், பிரதீக் ஜோடியை பிரிக்க முடியாமல், தமிழக பவுலர்கள் திணறினர். இருவரும் அரைசதம் அடித்தனர்.
முதல் நாள் முடிவில் மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 275/5 ரன் எடுத்திருந்தது. ஸ்பார்ஷ் (64), பிரதீக் (50) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகத்தின் ஷவின் 3 விக்கெட் சாய்த்தார்.

Advertisement