ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி விழிப்புணர்வு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு டூவீலரில் ஊர்வலமாக சென்று ஹெல்ெமட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகம் முழுவதும் ஜன.,1 முதல் 31 வரை சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு தினமும் வட்டார போக்குவரத்துத்துறை, காவல் துறை, டூவீலர் விற்பனையாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக போலீசார், ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் 110 பேர் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி பாரதிநகர் வழியாக புதிய பஸ்ஸ்டாண்ட் சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆனந்த், மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களே காரணம்: பிரதமர் மோடி பேச்சு
-
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க போலீசாரை ஏவி அச்சுறுத்தல்; அண்ணாமலை கண்டனம்