என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு நடுநிலைப்பள்ளியில் பயிற்சி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி அருகே, வடக்கு ஒன்றியத்தில், 19 நடுநிலைப்பள்ளிகளில், தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வு தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், அறிவுசார் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது.
டி.நல்லிக்கவுண்டன்பாளையம் பள்ளியில் நடந்த நிகழ்வில், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். வடக்கு வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி அமைப்பின் மாநில தலைவர் ரமேஷ், என்.எம்.எம்.எஸ். தேர்வின் அவசியம், போட்டி தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, அறிவியல் திறனறிவு போட்டியில் பங்கேற்று வென்ற, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இனி, ஒவ்வொரு நாளும் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் இணையவழி வாயிலாக என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கான பயிற்சிகளை தொடர்ந்து நடத்த உறுதியேற்றனர். பள்ளி ஆசிரியர் வகிதா நன்றி கூறினார்.
மேலும்
-
'ரஷ்ய கச்சா எண்ணெய் விற்பனையை தடுக்க சர்வதேச நாடுகளை மிரட்டும் அமெரிக்கா'
-
நீங்கள் வேறொரு பெண்ணிடம் பேசினால் உங்கள் பேச்சை மனைவி கண்டிப்பாக கேட்பார்: முதல்வர் விழாவில் சுகி சிவம் சர்ச்சை பேச்சு
-
தமிழக பா.ஜ., பொறுப்பில் இருந்து கேசவவிநாயகம் மாற்றப்பட்டது ஏன்; ஆர்.எஸ்.எஸ்., விளக்கம்
-
'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து; கோப்பு தயாரிப்புக்கு போலீசிடமே லஞ்சம்
-
'வெள்ளி, திங்கள் தேர்தல் வேண்டாம்' தே.ஜ., கூட்டணி கட்சிகள் விருப்பம்
-
ராமதாஸ் பெயரில் புதுக்கட்சி உதயம்