ராமதாஸ் பெயரில் புதுக்கட்சி உதயம்
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளர், 'அய்யா பாட்டாளி மக்கள் கட்சி' என்ற பெயரில், புதுக்கட்சி துவக்கி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ராமதாஸ் - அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலில், பா.ம.க., உடைந்தது. ஆனால், கட்சியும், மாம்பழ சின்னமும் அன்புமணிக்கு தான் சொந்தம் என, தேர்தல் கமிஷன், நீதிமன்றம் அறிவித்துள்ளன. இதனால் கோபமடைந்த ராமதாஸ், வரும் தேர்தலில், அன்புமணிக்கு எதிராக தன் ஆதரவாளர்களை களமிறக்க ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது அணியின் தலைமை நிலையச் செயலர் அன்பழகனின் மகன் முகிலன், தன் தலைமையில், 'அய்யா பாட்டாளி மக்கள் கட்சி' என்ற பெயரில், புதிய கட்சியை உருவாக்கி உள்ளார்.
பா.ம.க., கொடியில் ராமதாஸ் படத்தை வைத்து, கொடி தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சியை பதிவு செய்ய, தேர்தல் கமிஷனிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ராமதாஸ் ஆதரவு உள்ளதா என்பது தெரியவில்லை.
பெட்டி வாங்கும் காலம். பல புது கட்சிகள் உண்டானால் தானே அரசியலில் சம்பாதித்தவன் பணம் பரவலாகும். இன்னும் சில பேரும் பிழைக்கலாம். சோசலிசம் கொள்கை இது.
இரண்டு கட்சிகளுமே சாதீய கட்சிகள் தானே? குடும்பத்தில் யாராவது ஒருவர் பதவியில் இருக்க வேண்டுமென்று போடும் நாடகம். ஆனால் மக்கள் இருவரையுமே புறம் தள்ள போகிறார்கள். இன்னும் ஜாமீனிலும் விசாரனை வளையத்திற்குள்ளும் தானே மகன் இருக்கிறார்.
புரட்சி, எழுச்சி, மறுமலர்ச்சி, புதிய, திராவிடம், தமிழக, இப்படி ஏதாச்சும் ஒண்ணை கண்டிப்பா உங்க கட்சிபேருல சேத்துக்கோங்க.
முச்சந்தியில் நிறுத்தி சாட்டையடி அடியுங்கள் என்று சொன்னவர் தனி கட்சி ஆரம்பிக்கும் நிலைக்கு வந்து விட்டார். ஓய்வு எடுப்பது நல்லது
அ ப ம க. அப்பா ம க
இந்த கட்சிக்கு மாங்காய் சின்னம் ஒதுக்கப்படுகிறது. இந்த கட்சி அன்புமணி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும்.
சற்று பின்னோக்கி பார்த்தால் எங்கேயோ இருந்த ராமதாஸ் வன்னிய மக்களை பகடை காயாக்கி இன்று கோடானு கோடி சொத்துக்களை அடைந்தது எப்படி? ரெண்டு திருட்டு த்ரவிஷ கட்சிகளுடன் பேரம் பேசி பேசி நிலபுலன்கள் சொத்துக்களை வாங்கி குவித்துவிட்டார். கொள்கை சித்தாந்தம் எதுவுமில்லை.
இப்போது நேரமில்லை அடுத்த தேர்தலில் பார்ப்போம் இதுதான் தேர்தல் ஆணையத்தின் விடை. பேரன் பேத்திகளுடன் வீட்டிலேயே விளையாடிக்கொண்டிருக்கும் நேரம் இது வீணாக்காதீர்கள் சட்டுபுட்டுன்ணு விலையாட்டை ஆரம்பியுங்கள்மேலும்
-
ஏஐ மாநாடு நடப்பதால் 380க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
-
இதெல்லாம் ரொம்ப டூ மச்; முன்னாள் அதிபர் பேசியது பிடிக்காததால் சுவிட்சர்லாந்துக்கு வரி விதித்தார் டிரம்ப்
-
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மத்திய அரசு
-
திமுக அரசுக்கு ஆதரவான மனநிலை: முதல்வர் ஸ்டாலின்
-
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்
-
சீனா, ஜப்பான், பிரான்சை விட வந்தே பாரத் ஏசி ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்