வாக்காளர் பட்டியல்; பார்வையாளர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மனிஷ் நாரணவரே முன்னிலை வகித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் குல்தீப் நாராயண் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டத்தில், வாக்காாளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின்போது (எஸ்.ஐ.ஆர்.) பெறப்பட்ட கோரிக்கைகள், மறுப்புகள் தொடர்பான கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முரண்பாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.



- நமது நிருபர் -:

Advertisement