ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது: முதல்வர் ஸ்டாலின் 'பளீச்'!
சென்னை: ''ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்'' என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
குடைச்சல்
மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதிலும் திமுகவுக்கு குடைச்சல் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறது. தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் முன்னோடி திட்டங்களாக மாறியுள்ளன. திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும மத்திய அரசாலேயே தமிழகத்தின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. அனைத்து வகை புள்ளி விவரங்களிலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
ஜீரோ
மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. திமுக அரசு தொடர்ந்தால் தான் தமிழகம் நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
பல நன்மைகளை செய்து வரும் தமிழக அரசுக்கு மத்திய அரசு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் ஜீரோ கொடுத்த பாஜவுக்கு தேர்தலில் மக்கள் ஜீரோவை திருப்பி தருவர். மத்திய அரசு தமிழகத்துக்கு துரோக்கத்தையும், அநீதியையுமே செய்து வருகிறது.
ஒத்துவராது!
பிறகு கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும்.
இடையில் சிலர் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு சதி செய்கின்றனர். திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் நன்றாக இருக்கும். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.
கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா என்பதற்காக சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர்.
சிலரின் சதி பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை.
ராகுல் சகோதரர்
அரசியலை தாண்டி என்னுடைய சகோதரர் போன்றவர் ராகுல். திமுக, காங்கிரஸ் இணைந்து தான் சட்டசபை தேர்தலை சந்திக்கும். 2021ம் ஆண்டு தேர்தலை விட 2026ம் ஆண்டு தேர்தல் கடினமாக இருக்கும் என்பது எதிர்க்கட்சிகள் மக்களை குழப்ப பேசும் பேச்சு. கருணாநிதியிடம் இருந்து உழைப்பை கற்றுக் கொண்டேன், அதையே எனது மகனுக்கு கற்றுத் தருகிறேன். எதையும் எதிர்பார்க்காமல் உழைத்தால் தான் அரசியலில் முன்னுக்கு வர முடியும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
இன்றைக்கு ஆட்சியில் பங்கு என வந்து விட்டு நாளை கட்டிங்கிலும் பங்கு வேண்டும் எனக் கேட்டால்? அதனால்தான் சரிவராது என ஆரம்பத்திலேயே கூறுகிறோம்!
குடும்ப உறுப்பினர் அட்டை கொடுத்தவுடன் ஆட்சியில் பங்கு ஒரு பதவி வழங்க படும்.
அடிமையா வேலை செய்யிறவங்க அதிகாரத்துக்கு ஆசைப்படலாமா ???? கேட்கிறார் துக்ளக்கார் ..... இது ஊ பிஸ் க்கும் புரிந்த உண்மை .........
மத்தியில் கூட்டாட்சி இருந்த பொது ஒரு லச்சத்து எழுபது ஆறாயிரம் கோடி. இப்போது பங்கு கொடுக்க மனமில்லை.
ஸ்டாலினுக்கும் அவர் தங்கைக்கும் , மகனுக்கும் மற்றும் குடும்ப கொத்தடிமைகளுக்கும் , ஜால்ரா அடிக்கும் வைகோ , செல்வ பெருந்தொகை , வீரமணி , லஞ்சம் ஊழலில் திளைக்கும் அமைச்சர்களுக்கும் ஒரு விண்ணப்பம் , உங்களிடம் பணம் கொட்டி கிடக்கிறது , அடிமை உடன்பிறப்பு தொண்டர் கூட்டம் இருக்கிறது , டிவி சேல்ஸ் எல்லாம் உங்களுக்கு ஜால்ரா , நீங்கள் தனியா நின்று ஜெயித்து காட்டுங்களேன் , ஏன் மத வாத , மத சார்பற்ற , மற்றும் திராவிட மாடல் என்றே பேசி கொண்டு அலைகிறீர்கள் ,
காங்கிரஸ் மன்மோகன் அமைச்சரவை 10 ஆண்டு 500 லட்சம் கோடி ஊழல் பணம் வாரி சுருட்டிய போது... ஐஸ் கிரீம் சாப்பிட்ட மாதிரி இருந்ததா? இப்ப கசக்குதா?
///500 லட்சம் கோடி ஊழல்//// இது போன மாசம்....? இப்ப, இந்த மாச கணக்கு என்ன...? கூட்டி கழிச்சு பாரு... கணக்கு அதிகமா வரும்...? “தேனெடுப்பவன் புறங் கையை நக்காமல் இருக்க மாட்டான்”... இது பழமொழி... இவனுங்க என்னவோ இந்திரன், சந்திரன், அரிச்சந்திரன் மாதிரி கமெண்ட் போடுறாங்க...? இவங்க ஆட்சியை விட்டு இறங்குனாதானே இவனுங்க எவ்வளவு சுருட்டினாங்க...ன்னு தெரியும்...?
அடுத்து டாய்லெட் பேப்பார்கள் தயார்.
ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது என்றால் கொள்ளை அடிப்பதில்லாவது பங்கு கொடுங்கள் என்று கூட்டணி கட்சிகள் கேட்கிறார்கள். ஒரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் குறைந்தது 5 லட்சம் கோடி சம்பாதித்து விடுகிறார்கள்.
ஆட்சியில் பங்கு அடிமடியில் கை வைத்து விடும்.
மக்களே புரியுதா,,மேலும்
-
டில்லி மெட்ரோ ரயில் 5ம் கட்ட விரிவாக்கம் ரேகா அரசு ஒப்புதல்
-
விமானப்படை ஊழியர் கொலை வழக்கு கைதான இருவரை விடுதலை செய்தது கோர்ட்
-
செயற்கை நுண்ணறிவு மாநாடு நடப்பதால் 380க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
-
டில்லி வந்த கேரள பா.ஜ., கவுன்சிலர்கள்
-
கொலை முயற்சி வழக்கு நான்கு சிறுவர்கள் கைது
-
பி.ஹெச்.இ.எல்., 2.30 மடங்கு விண்ணப்பம்